வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு: ட்ரோன் உதவியுடன் மீட்பு பணியில் ராணுவம்

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரளஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக … Read more

மே.தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ. பரப்பளவு சூழலியல் பாதுகாப்பு பகுதி: மத்திய அரசு அறிக்கை

புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் என 6 மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ. சூழலியல் பாதுகாப்பு பகுதி ( Ecologically Sensitive Area – ESA) என மத்திய அரசின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 340-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் 200-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. 5-வது நாளாக இன்று (சனிக்கிழமையும்) மீட்புப் … Read more

சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு

புதுடெல்லி: இஸ்ரோ, நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு அமெரிக்காவின் ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய, ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட விமானப்படை விமானிகள் குழுவில் இருந்து இளம் வீரரான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விண்வெளிப் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், இவருக்கு மாற்றாக அனுப்ப குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச … Read more

வயநாடு நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும்…! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் படங்கள்!

இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் கேரளா வயநாட்டில் நிலச்சரிவுக்கு முன்பும், பின்பும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.   

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: நாளை வரை கனமழை பெய்யும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. நாளை வரை (ஆகஸ்ட் 4) அந்த 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, … Read more

யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் @ வயநாடு

திருவனந்தபுரம்: முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா. இவர், தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுஜாதா கூறியதாவது: திங்கள்கிழமை இரவே தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ … Read more

‘நீட்’ நுழைவு தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்து … Read more

இஸ்ரேல் – ஈரான் பதற்றம் எதிரொலி: ஆக.8 வரை டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

புதுடெல்லி: மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்குச் செல்லும், அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து இந்தியா வரும் மற்றும் டெல் அவிவ்-க்குச் செல்லும் எங்கள் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இது … Read more

வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாடு: ஆக.3-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை (ஆகஸ்ட் 3) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதுடெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3, 2024 அன்று காலை வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். வேளாண் பொருளியலாளர்களின் சர்வதேச சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒரு … Read more

தரவு பாதுகாப்பு ஆணைய விதிமுறைகள் தயாரிப்பில் மத்திய அரசு: மக்களவையில் அமைச்சர் ஜிதின் பிரசாதா தகவல்

புதுடெல்லி: தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கான விதிமுறைகள் தயாரிப்பில் உள்ளதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலாக இதனை தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூர்வப் பதிலில், “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023(டிபிடிபி) நாடாளுமன்றத்தில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது. … Read more