நாட்டில் உள்ள இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: நம் நாட்டில் உள்ள இளைஞர்களை, கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உடியனுர் தேவி கோயிலில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சோம்நாத்துக்கு, முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர் வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட பின்னர் சோம்நாத் பேசியதாவது: கோயில் என்பது முதியோர்கள் வந்து கடவுளின் … Read more

சமூக வலைதளம் மூலம் பாஜகவை விமர்சிக்கும் லாலு!

ஒரு காலத்தில் ஐடி துறையை கிண்டலாக பேசிய பிஹார் முன்னாள் முதல்வர் லாலு தற்போது, தனது அரசியல் செயல்பாட்டுக்கு சமூக வலைதளத்தையே பிரதானமாக சார்ந்து உள்ளார். உடல்நலம் காரணமாக லாலு முன்பு போல் வெளியே செல்வதில்லை. அவருடைய மகள் ரோஹிணி ஆச்சார்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மட்டுமே அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மற்றபடி, அவரது அரசியல் செயல்பாடுகள் எல்லாம் சமூக வலைதளம் மூலமாகத்தான் நிகழ்கின்றன. பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து லாலு இடும் பதிவுகள் … Read more

“பிரிவினையை தூண்டுகிறார் மோடி” – கார்கே குற்றச்சாட்டு

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள், நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கார்கே கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். காங்கிரஸ், சமாஜ் வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டு கிறார். நாங்கள் இதுவரை புல்டோசர்களை பயன்படுத்தியது கிடையாது. பிரதமர் மோடியின் கருத்துகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் … Read more

வடக்கு Vs தெற்கு… பிளவுவாதம் பேசுகிறாரா மோடி? – ‘மாறும்’ பாஜக தேர்தல் வியூகம்

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5-வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வட மாநிலங்களில் மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உத்தரப் பிரதேச மக்களை இழிவாகப் பேசுகின்றனர். இதை நாம் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது” எனப் பேசினார். இது பெரும் … Read more

பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்… ஷாக் வீடியோ

Lok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

“ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜாம்ஷெட்பூர்: ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுவதாகவும், அவரது பேச்சால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடுகளைச் செய்ய தொழிலதிபர்கள் விரும்பவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை பரம்பரைச் சொத்தாகப் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியின் இளவரசர்(ராகுல் காந்தி) பயன்படுத்தும் மொழியைப் பார்த்தால் அக்கட்சி ஆளும் மாநிலங்களில் … Read more

49 தொகுதிகளில் நாளை காலை தொடங்குகிறது 5ம் கட்டத் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளில் நாளை காலை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 5ம் கட்டத் தேர்தல்: மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், … Read more

மோடியின் வாராணசி தொகுதியில் பலரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – சில கேள்விகளும், பாஜக வியூகமும்

பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யும் மனுக்கள் பலவும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் நிராகரிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதா? இதன் பின்னணி என்ன? இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 57 தொகுதிகளுக்குக் கடைசிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் மே 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாவது முறையாக மோடி! – … Read more

ரேபரேலி தொகுதி உடனான தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்த ராகுல்!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, அத்தொகுதியுடனான தன் பால்யகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “ரேபரேலி நாங்கள் சிறு வயதில் சில காலம் வாழ்ந்த ஊர். சமீபத்தில் அங்கு சென்றிருந்த போது நானும் சகோதரி பிரியங்காவும் நாங்கள் பால்ய காலத்தில் செலவிட்ட தெருக்களில் நடந்து சென்றோம். மிகவும் இனிமையான நினைவுகள் அவை. என் பாட்டியின் ஞானம், என் அப்பாவுக்கு பிடித்தமான ஜிலேபி, பிரியங்கா செய்யும் கேக்குகள்… எல்லாம் எதோ நேற்று நடந்துபோல் இருக்கின்றன. … Read more

குடியுரிமை சான்றிதழ் வழங்கியது பாஜக நடத்திய நாடகம்: மம்தா பானர்ஜி விமர்சனம்

குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: குடியுரிமை சான்றிதழ் 300 பேருக்கு வழங்கியதை மக்கள் உண்மை என நினைக்கலாம். ஆனால் இது தேர்தலுக்கான அரசியல். பிரதமரையோ அல்லது அவரது உத்தரவாதங்களையோ நீங்கள் நம்ப வேண்டாம். பிரதமர் மோடி திங்கட்கிழமை ஜார்கிராம் வருகிறார். … Read more