செய்தித் தெறிப்புகள் @ ஏப்.20: ராகுல் Vs மோடி வார்த்தைப் போர் முதல் டிடி நியூஸ் ‘காவி’ சர்ச்சை வரை

“பாஜக 150-ஐ தாண்டாது” – ராகுல் காந்தி பேச்சு: “பாஜகவினர் அதிகப்படியான இடங்களைப் பெறுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள். இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம்” என்றார். முன்னதாக, சமூக வலைதள பதிவொன்றில், “ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் … Read more

உத்தர பிரதேச பாஜக வேட்பாளர் உயிரிழப்பு: யோகி ஆதித்யநாத் இரங்கல்

லக்னோ: மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான குன்வர் சர்வேஷ் சிங் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்.19) நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட ராஜஸ்தான் 12, உத்தர பிரதேசம் 8, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பிஹார் 4, மேற்கு வங்கம் … Read more

“தேர்தல் பத்திர விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு!” – கபில் சிபல் காட்டம்

புதுடெல்லி: “தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, அவை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உள்ளது” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். 2024-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பங்கேற்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து சிற்சில மாற்றங்களுடன் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனைக் கண்டித்துள்ள கபில் சிபல், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில் ‘நாங்கள் தேர்தல் … Read more

“அரசியலமைப்பு என்பது பாஜகவுக்கு வெற்று காகிதம்தான்” – பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: “மோடியைச் சார்ந்தவர்களுக்கு அரசியலமைப்பு என்பது எதற்கும் மதிப்பில்லாத வெற்று காகிதத் துண்டுதான். மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் பல சட்டங்களை இயற்றியுள்ளது ஆளும் பாஜக அரசு” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் நடந்த பிரச்சாரப் பேரணியில் அவர் பேசியது: “ஆளும் பாஜக அரசு, மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் பல சட்டங்களை இயற்றியுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தினர். அவர்களில் சிலர் இறந்து கூட போனார்கள். அவர்களில் சிலர் பயங்கரவாதிகள், … Read more

அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்

Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.

“கர்நாடகாவில் காங்கிரஸ் 20+ இடங்களில் வெல்லும்” – சித்தராமையா நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு நற்பெயர் இருப்பதால் காங்கிரஸ் கட்சி 20 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ள நிலையில், பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 25 இடங்களில் காங்கிரஸும் பாஜகவும் … Read more

காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ – ‘பிரச்சார பாரதி’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது பற்றி தனது … Read more

டெல்லி மதுபான கொள்கை வழக்கு | மணீஷ் சிசோடியாவின் ஜமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் மீதான ஜாமீன் மனுக்கள் மீது தனது தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் விசாரணை அமைப்புகளின் வாதங்களைக் கேட்ட பின்னர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை ஏப்.30-க்கு … Read more

கொடூரம்! கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொல்லப்பட்ட மாணவி! கொன்றது யார்? என்ன காரணம்?

Latest News Neha Hiremath : கல்லூரி மாணவி ஒருவர், காதலை மறுத்த காரணத்திற்காக கர்நாடகாவில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

“பாஜகவின் ‘400 இடங்கள்’ என்ற படம் முதல் நாளே தோல்வி” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

புதுடெல்லி: 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்து விட்டது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார். பிஹாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 48.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் … Read more