டெல்லியில் கட்டுமானப் பணியிடத்தில் விபத்து: சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் சடலமாக மீட்பு

புதுடெல்லி: டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிகழ்விடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருவர் இன்னும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர் சந்தோஷ் குமார் யாதவ் (19) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காலை 6.10 மணியளவில் சந்தோஷ் குமார் யாதவ் மீட்கப்பட்டார். … Read more

88 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத கனமழை: டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்தகனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலின் மேற்கூரை நேற்று அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கிருந்த கார்கள் நசுங்கிசேதமாயின. இதில் காருக்குள்சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர். மேற்கூரை இடிந்து … Read more

தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு: மாணவர், பெற்றோரிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து, அந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில், என்டிஏ-வில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துமாணவர்கள், பெற்றோர்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வினாத் தாள் கசிவு, கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு முறைகேடுகள் இந்த ஆண்டுக்கான … Read more

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற வழக்கப்படி, குடியரசுத் தலைவர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தனித்தனியாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில் அளிப்பார் என … Read more

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல்வர் பொறுப்பை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்த பிறகு அவரை இந்த வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் நீதிமன்ற காவலில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் உசேன் … Read more

‘மைக் அணைப்பு’ சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் ‘நீட்’ எதிர்ப்புக் குரலால் முடங்கிய மக்களவை!

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் ‘மைக் அணைப்பு’ சர்ச்சை வலுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, … Read more

விற்பனைக்கு வந்த இந்திய புலம்பெயர் தொழிலாளர்களின் தரவுகள்: ஹேக்கர்கள் கைவரிசை

சென்னை: இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக அயல் நாடுகளில் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த தளத்துக்கான அக்சஸ் தங்கள் வசம் இருப்பதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அரசு தளம் என தகவல். இதனை அவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது கசிந்துள்ள தரவுகள் இது eMigrate போர்ட்டல் தொடர்புடைய விவரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்தி தொழிலாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பிறந்த … Read more

ஆளுநர் vs சபாநாயகர்: மேற்கு வங்கத்தில் எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் யாருக்கு?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் மற்றும் சபாநாயகர் இடையேயான மோதலால் இடைத்தேர்தலில் வென்ற இருவர் எம்எல்ஏ-வாக பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக இருந்த இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயத் உசேன், சயாந்திகா பந்தோபாதியா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து அவர்கள் எம்எல்ஏ-வாக பதவியேற்க அழைப்புக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் எம்எல்ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் … Read more

“நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை பேச அனுமதிக்கவில்லை!” – ராகுல் காந்தி வீடியோ பதிவு

புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காணொலி மூலமாக மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, “நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் ஒரு பேரழிவு. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் பலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் கனவுகளும் இலக்குகளும் அழிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 27) நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் … Read more

சர்வதேச மதச் சுதந்திரம் 2023: அமெரிக்க அரசின் அறிக்கையை நிராகரித்த இந்தியா!

புதுடெல்லி: சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க அரசின் அறிக்கை ஒரு சார்பானது என்பதால், இந்தியா அதனை நிராகரித்துள்ளது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சர்வதேச மதச் சுதந்திரம் 2023 பற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒரு சார்பானது என்பதால், அதனை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சமூக அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லாமல், வாக்கு வங்கி அடிப்படையிலான கருத்துகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கண்ணோட்டம் கொண்டதாக … Read more