“அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதல்”: குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெற்ற எமர்ஜென்சி

புதுடெல்லி: எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய குடியரசுத் தலைவரும் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. 1975 ஜூன் … Read more

எதிர்க்கட்சிகளின் ‘நீட்’, ‘மணிப்பூர்’ முழக்கங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

புதுடெல்லி: “ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு … Read more

வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் உயிரிழப்பு: மன உளைச்சலில் தந்தை மரணம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட் டினம் அருகே உள்ள பீமலியில் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவை தாங்க முடியாத தந்தையும் நேற்று உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). இவர் பஸ் போக்குவரத்து ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பார்கவ் (23) என்கிற மகன் இருந்தார். மேலும், இவர்களது வீட்டில் கடந்த 5 … Read more

பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 26) பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது. முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1980-ல் பாஜக தொடங்கியதில் … Read more

நான் எழுதிய கட்டுரையை ரசித்து படித்தார் அப்துல் கலாம்: நினைவு கூர்ந்தார் சுதா மூர்த்தி எம்.பி.

புதுடெல்லி: ‘‘நான் எழுதும் கட்டுரைகளை ரசித்து படித்தாக அப்துல் கலாம் எனக்கு போன் செய்து கூறினார்’’ என மாநிலங்களவை எம்.பி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73). இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது இவர் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவரது மகள் அக் ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் கடந்த 2006-ம்ஆண்டு பத்ம ஸ்ரீ … Read more

பகலில் கடிக்கும் கொசுக்களால் புனே மருத்துவர், மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று

மும்பை: மகாராஷ்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும்அவரது மகளுக்கு ஜிகா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜிகா வைரஸ் நோய் என்பது ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். மனிதர்களை பகலில் கடிக்கும் இந்த வகை கொசு டெங்கு, சிக்குன்குனியா, போன்ற நோய்களையும் பரப்பும் தன்மை கொண்டவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிகாவைரஸ் முதன்முதலில் உகாண்டாவில் கடந்த 1947-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து, கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் … Read more

“எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்” – சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி: “சபாநாயகர் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தி தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வானார். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற … Read more

‘எமர்ஜென்சி’ மீது மக்களவையில் சபாநாயகர் தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும் – ஒரு பார்வை

புதுடெல்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தைக் கண்டித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானம் ஒன்றை வாசித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானம் கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி: “சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எமர்ஜென்சியை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலக்கட்டத்தில் நடந்த அத்துமீறல்களை முன்னிலைப்படுத்தி, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த விதத்தை குறிப்பிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். … Read more

அவசரநிலைக்கு எதிரான சபாநாயகரின் உரை மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: அவசரநிலைக்கு எதிராக மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சபாநாயகர், அவசரநிலையை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை எடுத்துரைத்ததற்கும், ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த விதத்தை குறிப்பிட்டதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தியது ஓர் அற்புதமான செயல். அவசரநிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இன்றைய … Read more