மோடி 3.0 | மீண்டும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் நரேந்தி மோடி. அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர். நிர்மலா சீதாராமன்: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2019-ல் நிதி அமைச்சராக … Read more

மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங் – சூட்சமம் இருக்கு!

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில் கேபினெட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர். 

மோடி புதிய அமைச்சரவை: அஜித் பவார் அதிருப்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக. இந்த சூழலில் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார். “பிரஃபுல் படேல், மத்திய அமைச்சராக பணியாற்றியவர். அவர் தற்போது அமையும் புதிய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொள்வது சரியாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம். அதனால் அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் … Read more

PM Narendra Modi: பதவியேற்றார் பிரதமர் மோடி… கேபினட்டில் மொத்தம் 72 அமைச்சர்கள்!

PM Narendra Modi: டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வருகை

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை … Read more

பிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் கல்தா? ஸ்மிருதி இரானி முதல் அனுராக் தாக்கூர் வரை

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

“என்னால் தோற்றிருந்தால் மன்னிக்கவும்; தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” – விகே பாண்டியன்

புவனேஸ்வர்: ஒடிசா அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வந்த தமிழரான விகே பாண்டியன் தான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் … Read more

'என்னை மன்னிக்கவும்…' அரசியலில் இருந்து விலகினார் வி.கே. பாண்டியன் – என்ன காரணம்?

VK Pandian Retired: ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

மோடி பதவியேற்பு விழா | கார்கேவுக்கு அழைப்பு; தெலுங்கு தேசம், ஜேடியுவுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி?

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டுத் தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே டெல்லி வந்தடைந்தார். மொரீஷியல் பிரதமர் பிரவீன் ஜுக்நாத்தும் டெல்லி வந்தடைந்தார். கார்கேவுக்கு அழைப்பு: இதற்கிடையில், மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று அவர் விழாவில் கலந்து … Read more

மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா… எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்…?

PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்  பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.