மோடி அமைச்சரவையில் டாப் பணக்கார எம்.பி… சந்திரசேகர் பெம்மசானி சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

PM Modi 3.0 Cabinet Ministry: நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவரின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர எம்.பி., சந்திரசேகர் பெம்மசானியின் பொறுப்பேற்கிறார். யார் இவர், இவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.

3-வது முறையாக பிரதமர் பதவி: காந்தி, வாஜ்பாயி நினைவிடத்தில் மோடி மரியாதை

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி மோடி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கும் சென்றார். போர் நினைவிடத்தில் மோடியுடன் ராஜ்நாத் சிங்கும் இருந்தார். நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக … Read more

தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.  

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரலை வெட்டி காணிக்கை செலுத்திய இளைஞர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பல்ராம்பூரை சேர்ந்த பாஜக ஆதரவாளர் துர்கேஷ் பாண்டே (30). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளை டி.வி.யில் மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை கண்ட துர்கேஷ் பாண்டே மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து அருகில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று பாஜக வெற்றி பெற வேண்டிக்கொண்டார். சில மணி நேரத்துக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ முன்னிலை பெறுவதை கண்ட துர்கேஷ் பாண்டே மீண்டும் காளி கோயிலுக்குச் … Read more

முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் (50) மே 26-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், “பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு கணக்குகளில் இருந்த ரூ.187.3 கோடி மானியத்தை வெவ்வேறு கணக்குகளில் மாற்ற மூத்தஅதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர். ரூ.88 கோடியை கொள்ளையடிக்க கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்கொலைக்கு … Read more

இன்று பதவியேற்று கொள்ளும் 30 அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறை?

PM Narendra Modi 3.0: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவை தொடர்ந்து இன்று மோடி மற்றும் 30 எம்பிக்கள் அமைச்சராக பதவி ஏற்று கொள்ள உள்ளனர்.   

பிரஜ்வல் தாயாருக்கு நிபந்தனை ஜாமீன்

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 ஆபாச‌ வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் அளித்த‌ புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனிக்கு தப்பியோடிய அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை … Read more

PM Modi: பிரதமர் பதவியேற்பு விழாவில் நடைபெறவுள்ள சுவாரஸ்ய அம்சங்கள்!

PM Narendra Modi: இன்று மாலை 7.15 மணிக்கு 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

3-வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது … Read more

2024 மக்களவை தேர்தலில் 73 பெண்களுக்கு வெற்றி: 2019 தேர்தலை விட எண்ணிக்கை குறைந்தது

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8%ஆகவும் இருந்தது. இது 2024-ல்9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தது. இதன் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார். மற்ற அனைத்து கட்சிகளிலும் இதற்கு அடுத்த நிலையில் 33 சதவீதம் மற்றும் அதற்கு குறைவாகவே பெண் வேட்பாளர்கள் இருந்தனர். … Read more