‘மேன் ஆஃப் த மேட்ச்’ ராகுல் காந்தியே எதிர்க்கட்சி தலைவர் ஆகவேண்டும்: சசி தரூர்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் (ராகுல் காந்தி) சந்தேகத்துக்கு இடமின்றி இந்த மக்களவை தேர்தல் வெற்றியின் நட்சத்திரம். அவர்தான் இந்த தேர்தலின் மேன் ஆஃப் த மேட்ச். அவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் நாடு முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், கார்கே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அங்கு அவர் … Read more

‘ப்ராஜெக்ட் சுரேஷ் கோபி’… – கேரளாவில் தாமரை மலர்ந்து எப்படி?!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் நடிகர் சுரேஷ் கோபி. அவரது வெற்றியின் மூலமாக கேரள மாநிலத்தில் பாஜக முதன்முதலாக கால்பதித்துள்ளது. கேரளாவில் பாஜகவுக்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும் சுரேஷ் கோபி எப்படி தாமரையை மலர வைத்தார்? நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிறகு இதுவரை மூன்று முறையில் திருச்சூரில் களம்கண்டுள்ளார் சுரேஷ் கோபி. 2019-ல் மக்களவை தேர்தலில் முதல் முறையாக களமிறங்கினார். இதன்பின் 2021 … Read more

“நாட்டுக்கு சேவையாற்ற மூன்றாவது முறையாக வாய்ப்பு” – ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிரதமர் மோடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். அதன்பின் பேசிய பிரதமர் மோடி, “நாட்டுக்குச் சேவை செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளார்கள்” என்றார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கூட்டணியின் கூட்டம் … Read more

சிக்கிம் மாநில முதல்வராக ஜூன் 10-ல் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு

கேங்க்டாக்: சிக்கிம் மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங் வரும் 10-ம் தேதி பதவி ஏற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதையடுத்து, சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் வரும் 9ம் தேதி மீண்டும் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 9-ம் தேதி … Read more

மக்களிடம் தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: பாஜக 370-400 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திய கருத்துக் கணிப்பாளர்கள் தங்கள் செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் தலைவர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன்மூலம் நாட்டின் அரசியலமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த முறை எதிர்க்கட்சிகள் வலிமையுடன் இருக்கும். நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது … Read more

தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடி

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

“ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் முன்னுரிமை” – பிரதமர் மோடி | என்டிஏ கூட்டத்தில் வெற்றி உரை

புதுடெல்லி: “ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ)-வின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், … Read more

“பாராமதியில் தோல்வியை தழுவியது அதிர்ச்சி அளிக்கிறது” – அஜித் பவார்

மும்பை: அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட தனது மனைவி சுனேத்ர பவாரின் தோல்வி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தெரிவித்துள்ளார். “தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த முடிவினை எங்களால் பெற முடியவில்லை. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தரவில்லை. இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் என்னுடன் தான் உள்ளனர். மற்ற அனைத்து தொகுதிகளை காட்டிலும் பாராமதியில் எங்களுக்கு வாக்கு கிடைக்காதது … Read more

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த வருடம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் நாளிதழ்களில் பாஜக ஆட்சியை விமர்சித்து விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், 2019 – 23 வரையிலான கர்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தது என்றும் பாஜகவினர் ஊழல்வாதிகள் என்று விமர்சித்தும் கர்நாடகாவின் முக்கிய நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக ராகுல் … Read more

நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய வி.கே.பாண்டியன் மாயம்?

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக இருந்த வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு மாயமானதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஒடிசாவில் சுமார் 24 வருடங்களாக தொடர்ந்து 5 முறை ஆட்சி செய்த பிஜேடி தலைவர் நவீனுக்கு, தேர்தல் முடிவுகள் படு தோல்வியை அளித்தன. ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜேடிக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை. சட்டப்பேரவையின் 147 இடங்களில் பாஜக 79 இடங்களை பெற்று முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. பிஜேடி 51, காங்கிரஸ் 14, பிற கட்சிகள் … Read more