நீட் முறைகேடு: ஜூலை 8-க்குள் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு ஜூலை 8க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த பல்வேறு முறைகேடு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என சொல்லி தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வினாத்தாள் கசிவு, கருணை … Read more

மேற்கு வங்கத்தில் ரேஷன் பொருள் விநியோக ஊழல்: நடிகை ரிதுபர்ணாவிடம் அமலாக்க துறை விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல கோடி ரேஷன் பொருள் வினியோக ஊழல் வழக்கில் பிரபல வங்காள நடிகை ரிதுபர்ணா செங்குப்தாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரண நடத்தினர். மேற்கு வங்கத்தில் பொது வினியோக திட்டத்துக்கான ரேஷன் பொருட்களை வெளிச் சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பகிபுர் … Read more

பேரவை இடைத்தேர்தலில் ஆசாத் கட்சி போட்டி: உ.பி.யில் பாஜகவுக்கு சாதகமாக வாக்குகள் பிரியும் வாய்ப்பு

புதுடெல்லி: உ.பி.யில் சட்டப்பேரவையின் 9 உறுப்பினர்கள் மக்களவைக்கு போட்டியிட்டு, எம்.பி.யாகி விட்டனர். இதனால், அந்த 9 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன், சிஷாமா தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டனை பெற்றுள்ளார். இதனால் சிஷாமாவுக்கும் சேர்த்து 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் 4 முறை முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) போல் தலித் ஆதரவு பெற்றவராக சந்திரசேகர் ஆசாத் எனும் ராவண் … Read more

‘Cancel NEET too’ – நெட் தேர்வு ரத்தான நிலையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: புதன்கிழமை இரவு ‘யுஜிசி நெட்’ (ஜூன் 2024) தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து வந்த தகவலை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த பல்வேறு முறைகேடு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என சொல்லி … Read more

ரியாஸி தீவிரவாத தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 9-ம் தேதி வந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஹகீம் தின் என்பவரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ரியாஸி மாவட்ட சீனியர் போலீஸ் எஸ்.பி. மோஹித்தா சர்மா கூறியதாவது: தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் இவர் இல்லையென்றாலும், இவருக்குமுக்கியப் பங்கு … Read more

எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 156 ஹெலிகாப்டர் கொள்முதல்: மத்திய அரசு டெண்டர் வெளியீடு

புதுடெல்லி: எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 156 இலகு ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 156 ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இவற்றில்90 ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்கும், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படைக்கும் வழங்கப்படும். எச்ஏஎல் நிறுவனத்தின் பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர் 5.8 டன் எடை உள்ளது. … Read more

வெடிகுண்டு மிரட்டல் விடுப்போருக்கு விமானத்தில் பயணம் செய்ய 5 ஆண்டுகள் தடை?

புதுடெல்லி: விமான பாதுகாப்பு துறை தலைமை இயக்குநர் ஜுல்பிகர் ஹாஸன் நேற்று கூறியதாவது: விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் சம்பவங்கள்அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தாலும் இதுவரை 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மிட்டல் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, தேடுதல், வெளியேற்றல் நடவடிக்கை என பல்வேறு வகைகளில் இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. முழுமையான சோதனைக்குப் … Read more

காலிஸ்தான் தீவிரவாதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்திய கனடா அரசை கண்டித்து இந்தியா பதில் நடவடிக்கை

புதுடெல்லி: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி நேற்று செலுத்தப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா பதிலடி கொடுத்தது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளகுருத்வாரா அருகே மர்ம நபர் களால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் … Read more

பிஹாரில் ரூ.1,749 கோடி செலவில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராஜ்கிர்: பிஹார் மாநிலத்தில் ரூ.1,749 கோடிசெலவில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் தற்காலிக இடத்தில் 14 மாணவர்களுடன் செயல்படதொடங்கியது. பழங்காலத்தில் இதே நகரில் அமைந்திருந்த உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுவடிவம்தான் இது. மத்திய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான இது, சர்வதேச பல்கலைக்கழகம் ஆகும். வெளியுறவு அமைச்சகத்தின்கீழ், கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டின் … Read more

“டெல்லி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் உண்ணாவிரதம்” – பிரதமருக்கு அதிஷி கடிதம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி எதிர்கொண்டு வரும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் டெல்லி அமைச்சர் அதிஷி. அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டெல்லியின் தண்ணீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் இதற்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதற்கு … Read more