ஓர் ஆண்டில் வருவாய் ரூ.680 தானா? – மத்திய அமைச்சரின் பிரமாணப் பத்திர விவரத்தை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் தேர்தல் பிரமாணப்பத்தித்தில் ஏதாவது தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரி வாரியத்துக்கு (Central Board of Direct Taxes) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேர் தேர்தல் பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு, அவரின் உண்மையான சொத்து மதிப்புடன் பொருந்திப்போகவில்லை … Read more

“மோடி ஆட்சியில் ஓர் அங்குல நிலத்தை கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை” – அமித் ஷா தகவல்

லக்கிம்பூர் (அசாம்): நரேந்திர மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாமின் லக்கிம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சீன ஆக்கிரமிப்பின்போது ஜவஹர்லால் நேரு அசாமுக்கு ‘பை-பை’ சொன்னதை அசாம் மக்கள் மறக்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. அசாமும் அருணாச்சலப் பிரதேசமும் 1962-ஐ … Read more

வேட்பாளர் சொத்து விவரம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் சொல்வது என்ன?

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய அசையும் சொத்துகளைப் பற்றிய தகவல்களை அளிக்கும்போது அவை பெரும் மதிப்பு கொண்டவையாக, ஆடம்பர வாழ்க்கை முறையைச் சார்ந்தவையாக இல்லாதபட்சத்தில் அவற்றைப் பட்டியலிடத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேசு தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் கரிக்கோ க்ரி. இவரது வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் வேட்புமனுவில் தனது அசையும் சொத்து … Read more

‘தேசத்தில் பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளது’ – ஆனி ராஜா

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் ஆனி ராஜா. எதிர்வரும் தேர்தல், கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு உள்ள வாய்ப்பு மற்றும் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுவதற்கான காரணம் குறித்து அவர் விவரித்துள்ளார். “இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் போட்டியிடுகிறேன். 2019-ல் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக பார்க்கப்பட்டார். இப்போது அந்த சூழல் மாறியுள்ளது. இந்தியா கொடுங்கோன்மையை … Read more

“சிறுபான்மையினருக்கு ஆர்எஸ்எஸ் குறி!” – ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடல் விவகாரத்தில் பினராயி தாக்கு

கொல்லம்: கேரளாவில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடல் விவகாரம் தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “சிறுபான்மையினரை ஆர்எஸ்எஸ் குறிவைக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றவரை தூண்டி விடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பொறியில் சிக்கிக் கொண்டு நாம் சங்பரிவாரின் ஒரு பகுதியாக மாறிவிடக் கூடாது. அவர்கள் இதைக் (தி கேரளா ஸ்டோரி) கேரளாவின் கதை என்கின்றனர். கேரளாவில் எங்கே அப்படி நடந்தது? அவர்கள் போலியான … Read more

அதெல்லாம் பொய்யுங்க.. நாங்க சொல்வது தான் உண்மை -தேர்தல் பேரணியில் முழங்கிய அமித் ஷா

Amit Shah Speech: மோடி ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை… ஊடுருவல் நிறுத்தப்பட்டுள்ளது என அமித் ஷா மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் உரை.

“உங்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு நாங்கள் மறு பெயரிடலாமா?” – சீனாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி

புதுடெல்லி: “உங்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு நாங்கள் மறு பெயரிடலாமா?” என சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை வைத்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் இடங்களுக்குப் பெயர் வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. நான் சீனாவைப் பார்த்துக் கேட்கிறேன்… … Read more

கைதுக்கு எதிரான கேஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட் – காரணம் என்ன?

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. தனது கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்

Arvind Kejriwal Bail Reject: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு 2,843 விசாக்களை வழங்கியது பாகிஸ்தான்

புதுடெல்லி: பைசாகி கொண்டாட்டத்துக்காக இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் 2,843 விசாக்களை வழங்கி உள்ளது. பைாசாகி என்றும், வைசாகி என்றும் அழைக்கப்படும் சீக்கியர்களின் அறுவடைத் திருவிழாவை முன்னிட்டும், சீக்கியர்களின் குருவான குரு கோபிந்த் சிங் 1699-ல் கல்சா பாதையை உருவாக்கியதன் நினைவு தினத்தை முன்னிட்டும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் விழா நடைபெற உள்ளது. வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் 2,843 சீக்கியர்களுக்கு … Read more