வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் எந்தப் பயனும் இல்லை: பிரசாந்த் கிஷோர்

Lok Sabha Elections: இம்முறை தனது வழக்கமான தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதியில் போட்டியிடாமல், கேரளாவின் வயநாடில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர். 

அயோத்தி கோயில் திறப்பு விழாவை புறக்கணித்து ராமரை அவமதித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி

லக்னோ: அயோத்தியில் பிரான பிரதிஷ்டை விழாவுக்கான அழைப்பை மறுத்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாமல் இருக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாட்டு மக்கள் கொடுத்த ஒவ்வொரு பணத்தைக் கொண்டும் இவ்வளவு அழகான கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் (காங்கிரஸ்) பாவங்களை மக்கள் மன்னித்து, உங்களை பிரான … Read more

Lok Sabha Election 2024: பாஜக கூட்டணி 400+ தொகுதிகளை கைப்பற்றுமா..!

Lok Sabha Election 2024: பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400+ தொகுதிகளை கைப்பற்றும் என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு அச்சுறுத்தல்கள் காரணமாக விஐபிகளுக்கு வழங்கப்படும் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் அடங்கிய இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தயாரித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான அறிக்கையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தீவிரமான பாதுக்காப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சகம் இந்தப் பணிக்காக 40 – 45 பேர் அடங்கிய குழுவை மத்திய … Read more

மோடி மீண்டும் பிரதமராக காளிக்கு ரத்த பூஜை: விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்

பெங்களூரு: நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக ரத்த பூஜை மேற்கொண்டபோது இளைஞர் ஒருவர் விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகிலுள்ள சோனார்வாடேவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர் (29). நகைக் கடை நடத்திவரும் இவர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடியை பிரதமர் ஆக தேர்ந்தெடுக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு ரத்தத்தில் கடிதம் … Read more

Maharashtra: நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்த மகாராஷ்டிரா தொகுதி உடன்பாடு!

Maharashtra, Lok Sabha Election 2024: மகா விகாஸ் அகாடி கூட்டணி சீட்-பகிர்வு ஒப்பந்தம் ஆனது. மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் தாக்கரேவின் சேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் மற்றும்  என்சிபி (சரத் பவார்) கட்சி 10 இடங்களிலும் போட்டியிடுகிறது. 

மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய மடாதிபதி: எடியூரப்பா மூலம் பாஜக தூது

பெங்களூரு: கர்நாடகாவில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக லிங்காயத்து மடாதிபதி ஃபக்கீரா திங்களேஸ்வர் சுவாமி சுயேச்சையாக போட்டியிடுவதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தார்வாட் தொகுதியில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி 5-ம் முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வினோத் அசுதி நிறுத்தப்பட்டுள்ளார். பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறையும் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என பாஜக மேலிடத் தலைவர்கள் … Read more

ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சமோசாவில் ஆணுறை, குட்கா மற்றும் கற்கள்.. சதித்திட்டம் அம்பலமானது!

Business Rivalry: ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு.

‘4,000 சீட்களுக்கு மேல் வெற்றி’ – நிதிஷை கலாய்க்கும் ‘நெட்டிசன்’கள்

வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணி 4 ஆயிரம் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் பிறகு அதிலிருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) திரும்பியுள்ளார். இந்நிலையில் பிஹாரின் நவாடா மாவட்டத்தில் என்டிஏ சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் … Read more

திருமணத்தின் போது கன்னியாதான சடங்கு செய்வது கட்டாயம் இல்லை: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமணமானவர். குடும்ப தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது அசுதோஷ் யாதவுக்கு எதிராக கடந்த மார்ச் 6-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அசுதோஷ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. … Read more