தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையில் 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்தது காங்கிரஸ்

மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி, இம்முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் இரட்டை இலக்க எண்ணில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 27 இடங்களில் குறைந்தது 10 இடங்களை வெல்லும் என்றே அவர் சொல்ல வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டாலும் இம்முறை வாகை சூடும் என்று அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். … Read more

“கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்பு” – இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

புதுடெல்லி: “இந்த மக்களவைத் தேர்தல் இண்டியா கூட்டணி குறைந்தது 295 இடங்களைக் கைப்பற்றும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், “இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில், வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களின் முக்கியமான வியூகக் கூட்டத்தை டெல்லியில் சனிக்கிழமை நடத்தினர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் … Read more

Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு!

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ரிபப்ளிக் தொலைக்காட்சி – Matrize கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 353 – 368 இண்டியா கூட்டணி- 118 – … Read more

காதலியுடன் மனைவியிடம் சிக்கிய கணவர்! மாறி மாறி அடித்துக்கொண்டதால் பரபரப்பு!

ஆந்திராவில் கணவரின் திருமணத்தை மீறிய உறவை மீடியாவுடன் சென்று கையும் களவுமாக பிடித்த பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் சிக்கல்? கணவன் – மனைவிக்குள் ஏன் இவ்வளவு அடிதடி?

“பிரதமர் மோடிக்கு சட்டம் பொருந்தாதா?” – தியான மண்டப புகைப்படங்கள் குறித்து திக்விஜய் சிங் கேள்வி

போபால்: “பிரதமர் மோடி சட்டத்தால் ஆளப்படவில்லையா அல்லது அவர் விதிகளுக்கு கட்டுப்படாதவரா?” என்று பிரதமரின் தியான மண்டப புகைப்படங்கள் குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவிட தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்த பிரதமர் மோடி அதுகுறித்த புகைப்படங்கள் வெளியிட்டிருப்பது குறித்து அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். கபில் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘புகைப்படம் எடுக்கத் தடைவிதிக்கப்பட்ட விவேகானந்தர் … Read more

ஊடகத்துறையில் இதுவே முதல்முறை… AI உதவியுடன் Zee News Exit Poll – இதனால் என்ன நன்மை?

Zee News AI Exit Poll: Zee News – ICPL இணைந்து முதல்முறையாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இறுதிகட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 49.68% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஜார்க்கண்ட்டில் 60.14% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் சில வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. மாலை 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்: உத்தரப் பிரதேசம் – 46.83% பஞ்சாப் – 46.38% மேற்கு வங்கம் – 58.46% பிஹார் – … Read more

காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குப்பதிவு: மே.வங்கத்தில் இவிஎம் இயந்திரங்கள் சூறை

புதுடெல்லி: மக்களவை தேர்தல் இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு களைகட்டி வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் 26.30% வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 31.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்: உத்தர பிரதேசம்- 28.02% பஞ்சாப்- 23.91% மேற்கு வங்கம்- 28.10% பிஹார் – 24.25% ஒடிசா- … Read more

இறுதிகட்ட தேர்தல் | மே.வங்கத்தில் வன்முறை: இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் சூறை

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சூறையாடினர். அதோடு இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்டமாக 9 தொகுதிகளில் இன்று (ஜூன்.,01) வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) தொடங்கிய நிலையில், மேற்கு வங்கத்தில் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. … Read more

100-க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களில் கார்கே, ராகுல் பிரியங்கா பங்கேற்பு

மக்களவை தேர்தலுக்காகக் கடந்த இரண்டு மாதங்களில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் 100க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸுக்கு வாக்கு சேகரிக்க முயன்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார், 20 பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் மற்றும் ஊடகங்களுக்கு 70 பேட்டிகள் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 107 பேரணிகள், பிரச்சார கூட்டங்கள், வாகன … Read more