ஆசிய கோப்பை 2023: அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடிக்கும் ஜாக்பாட்

காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். அதுவும் இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவருக்கு வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னொரு ஜாக்பாட்டை கொடுக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதில் ஆசிய கோப்பையில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்த … Read more

உலகக் கோப்பை தொடரில் பாண்டியாவுக்கு பின்னடைவா – பிசிசியின் பிளான் என்ன?

Bumrah As Vice Captain: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில், எதிர்காலத்தில் ரோஹித் சர்மாவிடம் இருந்து தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன்னணி போட்டியாளராக ஹர்திக் பாண்டியா காணப்படுகிறார். எதிர்வரும் ஆசிய கோப்பை  தொடர் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆகிய இரு அணி முக்கிய தொடரின் துணை கேப்டனாக அவரே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியிருப்பது இந்த விஷயத்தில் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.  … Read more

IND vs IRE: வெற்றியை தொடர இந்த வீரரை வெளியே அனுப்ப திட்டமிடும் இந்திய அணி?

IND vs IRE 2nd T20: இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் டப்ளின் நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 51 ரன்களையும், கர்டிஸ் கேம்பர் 39 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் பும்ரா, பீஷ்னோய், … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு தகுதி

சின்சினாட்டி, ஜோகோவிச் அசத்தல் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-4 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அவருக்கு இந்த வெற்றியை பெற 61 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரான … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே, ஷைலி சிங் ஏமாற்றம்

புடாபெஸ்ட், உலக தடகளம் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. 27-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த 2,100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். தொடக்க நாளான நேற்று இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தின் தகுதி சுற்றில் தேசிய சாதனையாளரான இந்திய வீரர் அவினாஷ் சாப்லே பங்கேற்றார். அவர் பந்தய தூரத்தை 8 … Read more

மாநில துப்பாக்கி சுடுதலில் கந்தவேழ் மதுகுமரன் 3 பதக்கம் வென்றார்

சென்னை, மாநில துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி சென்னையை அடுத்த அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சூட்டிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் ஜூனியர் ஆண்கள் டிராப் தனிநபர் பிரிவில் நாகப்பட்டினம் மாவட்ட வீரர் கந்தவேழ் மதுகுமரன் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் புதுக்கோட்டை வீரர் யுஹன் முத்துக்குமார் தங்கப்பதக்கமும், நாகப்பட்டினம் வீரர் ஆரோன் பென்ஹர் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். இதன் அணிகள் என்.ஆர்.பிரிவில் கந்தவேழ் மதுகுமரன், ஆரோன் பென்ஹர், ஹர்ஷித் கார்த்திக் ஆகியோர் அடங்கிய நாகப்பட்டினம் … Read more

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணிகள் தங்கப்பதக்கம் வென்றன

பாரீஸ், உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் டியோடாலே, பிராத்மேஷ் ஜவ்கர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 236-232 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. இதேபோல் பெண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதி போட்டியில் ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி, பர்னீத் கவுர் … Read more

2வது டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அமீரக அணி வெற்றி

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி நியூசிலாந்து அணி … Read more

பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி இப்படி பேசலாமா? அஸ்வின் நச்சுனு கேட்ட கேள்வி

ரவி சாஸ்திரி இந்திய அணியில் இருந்தபோது முக்கியமான போட்டிகளில் வெளியே உட்கார வைக்கப்பட்டார் அஸ்வின். இது குறித்து அப்போது பெரும் சர்ச்சைகள் எல்லாம் எழுந்த நிலையில் அஸ்வின் பெரிதாக ஏதும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், ரவிசாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு மீண்டும் கமெண்ட்ரிக்கு வந்துவிட்டார். அண்மையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசியும் இருந்தார். அதில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் டாப் 7 ஆர்டர்களில் 3 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க … Read more

உலக கோப்பை 2023: தென்னாப்பிரிக்கா சீன்லையே இல்ல… கங்குலி கணித்த 5 அணிகள்

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்களுக்கும் குறைவாக உள்ளது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் சமயத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கணிப்புகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவராகவும் இருந்த சவுரவ் கங்குலியும் தன்னுடைய கணிப்பை தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, என்னுடைய கணிப்பின்படி 5 அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு … Read more