இந்தியா vs பாகிஸ்தான் பைனல் லைவ் பார்க்க முடியலையா… இலவசமாக இதை பாருங்க!

Asia Cup 2025, India vs Pakistan Live Score Card: ஆசிய கோப்பை 2025 தொடரின் (டி20ஐ) இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதல்முறையாக மோத இருக்கிறது. Add Zee News as a Preferred Source India vs Pakistan Final Live: அதிக முறை கோப்பை வென்ற இந்தியா  ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை மொத்தம் … Read more

ஆசிய கோப்பை இறுதி போட்டி: மழை பெய்யுமா? பெய்தால் என்ன ஆகும்? கோப்பை யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரின் 17வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 09ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களுடன் ஹாங்காங், யுஏஇ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் வெளியேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் விளையாடிய 4 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.  Add Zee News as a Preferred Source மழை குறிக்கிடுமா?  … Read more

ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. பும்ராவா இருக்காரா?

ஆசிய கோப்பை தொடர் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்திய அணியே இப்போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இத்தொடரிலேயே ஏற்கனவே இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. இதன் காரணமாகவே இந்திய அணி வெற்றி … Read more

பாண்டியா, அபிஷேக் சர்மா காயம்.. இறுதிபோட்டியில் விளையாடுவார்களா – மோர்னே மோர்கல் பதில்!

ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இத்தொடரில் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  Add Zee News as a Preferred Source நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) இலங்கை அணியுடன் இந்திய … Read more

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி

குவாங்ஜு, உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி (வயது 18) பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில், உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள துருக்கியின் ஓஜ்னுர் கியூர் கிர்தியை 146-143 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் வெற்றி பெற்றுள்ளார். சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவருக்கு 3-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, தோமன் குமாருடன் இணைந்து ஷீத்தல், கலப்பு குழு பிரிவில் வெண்கல … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-4,5-7, 6-0 என்ற செட் கணக்கில் டெரன்ஸ் அட்மேனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜானிக் சின்னெர், ஹங்கேரியாவின் … Read more

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி; உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம்

புதுடெல்லி, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியில் நடந்து வருகின்றன. இதில், உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் கிடைத்துள்ளது. இதில், இந்திய பாரா தடக வீரரான சைலேஷ் குமார் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றது மட்டுமின்றி, சாம்பியன்ஷிப்பில் சாதனையும் படைத்துள்ளார். அமெரிக்காவின் எஜ்ரா பிரெக் (1.85 மீட்டர்) வெள்ளி பதக்கமும் மற்றும் இந்தியாவின் வருண் சிங் பாட்டி (1.85 … Read more

மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து 232 ரன்கள் சேர்ப்பு

பெங்களூரு, 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

டோக்கியோ, ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் – பெல்ஜியத்தின் ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜிஸோ பெர்க்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! இந்த 3 ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராகும் புஜாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, தனது பேட்டிங் திறன், பொறுமை மற்றும் நிதானமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரது பரந்த கிரிக்கெட் அறிவையும், ஆட்ட நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு, அவரை ஐபிஎல் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த புஜாரா, டி20 உலகில் ஒரு பயிற்சியாளராக எப்படி ஜொலிப்பார் … Read more