அழுத்தத்தை எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் – ஹர்மன்ப்ரீத் கவுர்

புதுடெல்லி, 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் குறித்து … Read more

ஆசியக் கோப்பை த்ரில்லர்: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

India vs Sri Lanka : 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மோதல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத த்ரில்லர் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றிருந்த இந்திய அணிக்கு, இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயமாக இருந்தாலும், இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் வரை … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி கண்ட மரியா சக்காரி

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்) – கனடாவின் லெய்லா அன்னி பெர்னாண்டஸ் உடன் மோதினார். இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மரியா சக்காரி, யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 2-6, 0-6 என்ற செட் கணக்கில் லெய்லா அன்னி … Read more

மீண்டும் நியூசிலாந்து அணியுடன் இணைந்த பயிற்சியாளர்

வெல்லிங்டன், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர், நியூசிலாந்து அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 53 வயதான கேரி ஸ்டெட் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஐ.சி.சி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி … Read more

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது. … Read more

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்.. பும்ராவுக்கு பதில் இவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் நம்பர் ஒன் வகிக்கும் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய இடம் பெற்றுள்ளார். பும்ரா சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளுக்கு மட்டும் இடம் பெற்றார். அவற்றில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை எழுப்பினர். இந்த … Read more

இதை செய்தால் போது.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வெல்லலாம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இது ஆசிய கோப்பை வரலாற்றில் இரு அணிகள் முதன்முதலில் இறுதியில் சந்திக்கும் போட்டியாகும். டி20 வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு மோதல்கள் 15 முறையுள்ளன. இதில் இந்தியா 12 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. Add Zee News as a Preferred Source இந்த தொடரை பொறுத்தவரையில், இந்தியா லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி … Read more

இந்த வீரரை தூக்கினால் இந்தியா அவ்வளவுதான்.. பாகிஸ்தான் ஈசியா ஜெயிக்கும்!

ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு நேற்றைய போட்டியில் வங்கதேச அணியை 11 ரன்களில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னேறி இருக்கிறது. இதனால் மீண்டும் இத்தொடரில் 3வது முறையாக இந்திய அணியை சந்திக்க உள்ளது பாகிஸ்தான் அணி.  இப்போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் முதல் முறையாக மோத இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  … Read more

IND vs WI: டெஸ்டில் பெரிய மாற்றம்… இந்திய அணியின் பிளேயிங் XI இதுதான்

West Indies Tour Of  India: மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு வரும் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் (IND vs WI Test Series) மேற்கொள்ள இருக்கின்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் அவர்கள் விளையாட இருக்கிறார்கள். Add Zee News as a Preferred Source IND v WI: 3வது இடத்தில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. … Read more

ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியாவை வீழ்த்துவோம்.. பாகிஸ்தான் கேப்டன் சொன்ன 2 காரணம்!

ஆசிய கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேசம் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்தனர். தொடக்கத்திலேயே 50 ரன்களுக்கு உள்ளேயே 5 விக்கெட்களை இழந்ததால், பாகிஸ்தான் அணியால் 135 ரன்களைதான் எடுக்க முடிந்தது. தொடக்க வீரர்கள் அனைவருமே ஏமாற்றத்தை கொடுத்தனர்.  Add Zee News as a Preferred Source அதிகபட்சமாக … Read more