கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன்? சீமான் கண்டனம்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். 

சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அளவில் முதல்வர், டிஜிபி அடங்கிய குழுவும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கொண்ட குழுவும் உள்ளன. மாவட்டக் குழு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரித்து, மாநில குழுவுக்கு அறிக்கை … Read more

என்னிடம் சொல்லிவிட்டு தான் நயினார் பாஜகவில் இணைந்தார் – டிடிவி தினகரன்!

தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வளர்ந்துள்ளது, தேவைப்படும் போது தான் ஒரு மாநாடு நடைபெறும். தற்போது முருகன் மாநாட்டிற்கு தேவை உள்ளது என்று டிடிவி தினகரன் பேட்டி.

‘விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய தலைவர்’ – லாலுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் … Read more

‘கீழடியில் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே…!’ – சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி

மதுரை: “கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே.” என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி … Read more

நோயாளி​ எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க கோரி அரசு மருத்துவர்கள் பாதயாத்திரை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று (ஜூன் 11) சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரின்போது, அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே என்பது அனைவருக்கும் தெரியும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த … Read more

வணிக வளாகம் வழி​யே மெட்ரோ பாதை: திரு​மங்​கலத்​தில் அமை​யும் 9 மாடி கட்​டிடத்​தின் மாதிரி புகைப்​படம் வெளி​யீடு

சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் அடுக்குமாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட கட்டிடத்துக்கு உள்ளே மெட்ரோ ரயில் சென்று வெளியே வரும் வகையில், 9 அடுக்குமாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்களை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் திருமங்கலம் சந்திப்பு … Read more

பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் நீடிக்கிறது: வழக்கறிஞர் பாலு, 20 மாவட்ட நிர்வாகிகளை நீக்கினார் ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ்-அன்புமணி இடையே முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சமூக நீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 20 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை கட்சியில் இருந்து நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் பலமுறை முயற்சித்தும், முழு உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 5-ம் தேதி … Read more

இந்த பிரச்சனை இருந்தால் முக கவசம் கட்டாயம் – அமைச்சர் மா. சுப்பிரமணியம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் 29 ஆயிரத்து 200 மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி மூலமாகவும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூலை முதல் வாக்குச்சாவடி சீரமைப்பு பணி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்திய தேர்தல் ஆணைய ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, … Read more