ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கடந்த 2023-ம் அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு 2033-ம் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனைகளை இன்று மேற்கொள்ள வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக … Read more

எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, எய்ட்ஸ் பாதித்தோரின் பயணப்படி ரூ.1000 ஆகவும் உயர்த்தப் படவுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு எச்.ஐ.வி- எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விதமாக விவேகானந்தர் பிறந்த நாளான சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் … Read more

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன கூறியிருக்கிறார்கள்?

Sanitary Workers Protest : தூய்மை பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியில் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகள் கேட்டு தொடரும் இவர்களது போராட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது.

மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து மதுரை அருகே பாரப்பத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் … Read more

தவெக மாநாட்டிற்கு இத்தனை நிபந்தனைகளா? என்ன செய்ய போகிறார் விஜய்?

மதுரையில் இந்த மாதம் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது நான்கு நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் … Read more

9 நாட்களில் மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முக்கிய கடிதம்!

மதுரையில் இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.  இந்நிலையில் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் வெளி​யிட்ட அறி​விப்​பு: நாடு முழு​வதும் உள்ள அரசுமற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு வரும் நோயாளி​களின் அனைத்து வித​மான விவரங்களையும், அவர்​களுக்கு மேற்​கொள்​ளப்​படும் பரிசோதனை​கள் குறித்த தரவு​களை​யும் ஆவணப்​படுத்த வேண்டும் என்று ஏற்​க​னவே அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது. ஆனாலும், சில மருத்​துவ கல்​லூரி​களும், கல்வி நிறு​வனங்​களும் அதனை முறை​யாக பின்​பற்று​வ​தில்​லை. மருத்​து​வ​மனை​களில் உள்​நோ​யாளி​களாக அனு​ம​திக்​கப்​படு​வோரின் ஆவணங்​களில் துறை ​சார் மருத்​து​வர் மற்​றும் முது​நிலை உறை​விட மருத்​து​வர் கையெழுத்து … Read more

சொந்தமாக நிலம் இருக்கிறதா? இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பத்திர பதிவு என்பது பரிவர்த்தனையை உறுதி செய்தாலும், பட்டா தான் ஒரு நிலத்தின் மீதான உரிமையை நிரூபிக்கும் முதன்மையான அரசு ஆவணமாகும். வங்கி கடன் பெறுவது முதல், சொத்து வரி செலுத்துவது வரை அனைத்திற்கும் பட்டா அவசியமானதாகும்.