பேரிடரே இல்லை என்றவர் அதை ஆய்வு செய்ய வருகிறார்… உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

Latest News In Tamil: பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார் என்றும் ஆய்வு செய்து உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

“எண்ணூர் மீனவ குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்குக” – இபிஎஸ்

சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய், வெள்ளநீர் கழிவுகளுடன் கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது. … Read more

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார், மதுரை திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி விஜயகுமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையர் கே.சுப்பையா, பழநி டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி … Read more

மக்களுக்கு பொங்கல் திருநாளில் நல்ல செய்தி… அதுவும் முதலமைச்சர் கைகளால்!

Kilambakkam Bus Terminus: தமிழ் புத்தாண்டான தை ஒன்றாம் தேதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் வரும் என்றும் முதலமைச்சர் கைகளால் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு

சென்னை: பிரதமர் மோடி உத்தரவின்பேரில், நாளை தூத்துக்குடிக்கு வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி வந்து, வெள்ள சேதத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தேவையான உதவிகளை மத்திய … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாட்டம்: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின்: ‘கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயலை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்’என்பதுபோல, தனிமனிதர் உள்ளத்தை பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர். கிறிஸ்தவ மதத்தை பரப்பிட … Read more

டிச. 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச. 25) முதல்வரும் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28-ம்தேதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு … Read more

வானிலை மைய கருவிகள் உலகத்தரத்துக்கு ஒப்பானது; தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பயன்பாட்டில் இருக்கும் கருவிகள், உலகத் தரத்துக்கு ஒப்பானவை என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிக அளவு மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்துக் கூறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது … Read more