20 உடல்கள் மீட்பு, 40 இடங்களில் மீட்புப் பணி சிரமம், மக்கள் மறியல் – தூத்துக்குடி வெள்ள பாதிப்பு நிலவரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று காலையில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும், சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு … Read more

அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உறுதி? 2வது வழக்காக இன்று தீர்ப்பு!

Minister Ponmudi: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதி மன்றம்.    

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 640 சிறப்பு பேருந்து இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் டிச.22-ல் … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 22-ம் … Read more

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன்ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லுரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அவனியாபுரத்தில் 100 ஆண்டுகளுக்கும மேலாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன … Read more

தூத்துக்குடி வெள்ளத்தில் 2 நாட்களாக சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் … Read more

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாக வெள்ளத்தில் ஆவணங்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கின்றன. வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வேட்டி, சேலைகள் சேதமடைந்துள்ளன. ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த தண்ணீர்: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையோர பகுதிகளில் குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் … Read more