மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். … Read more

தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்! பேருந்துகள், ரயில்கள் இன்று இயக்கப்படாது!

Heavy Rain: பெரும் மழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.  

ரூ.720 கோடி செலவில் காற்றாலை, சூரியசக்தியால் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி: தமிழக மின்வாரியம் திட்டம்

சென்னை: காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை கூடுதலாக எடுத்துச் செல்வதற்காக பசுமைவழித் தடத்தின் (கிரீன் காரிடார்) 2-ம் கட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் திறன், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், திருப்பூர் மாவட்டம் பூலவாடியில் தலா 230 கிலோ வோல்ட்திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. … Read more

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை: தமிழக அரசு

சென்னை: கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (டிச.18) பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தொடர்ந்து மழை பொழிந்து வருகின்ற காரணத்தால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (டிச.18) நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த … Read more

தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… வரலாறு காணாத மழை – எப்போதுதான் நிற்கும்?

Heavy Rain In TN South Districts: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி, பாளையாங்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. 

தென் மாவட்டங்களில் கனமழை | தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்: சோதனை ஓட்டத்துக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த மார்ச் 2008-ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் … Read more

கோவில்பட்டியில் கொட்டி தீர்த்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் இன்று (டிச.17) அதிகாலை முதல் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டியில் இன்று அதிகாலை 2 மணி முதல் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் மதியம் 1.15 மணிக்கு மேல் கனமழையாக மாறியது. தொடர்ந்து மாலை 3 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிவிட்டபடி சென்றன. கோவில்பட்டி பிரதான … Read more

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை: ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மையம் 17.12.2023 நாளிட்ட அறிவிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதி கனமழையினை எதிர்கொள்ள முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன … Read more

தூத்துக்குடியில் கனமழை | தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக அவசர கால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதாலும், உபரிநீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், … Read more