தமிழக செய்திகள்
‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் சென்னை வழியாக புதிய வாராந்திர ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர விரைவு ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கலாச்சார மையங்களாக திகழும் வாராணசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல்கட்ட நிகழ்வு கடந்த ஆண்டு தொடங்கியது. இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் கன்னியாகுமரியில் இருந்து மதுரை, … Read more
தலைமை செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த மதுரை ஓட்டுநர்: சாமானியனுக்கும் அதிகாரம் வழங்கும் ஆர்.டி.ஐ. சட்டம்
மதுரை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன், அரசு அலுவலகங்களில் சாமானியரால் தகவல்களைப் பெற முடியாததாக இருந்தது. அதிகாரமிக்கோர், அரசியல் வாதிகள் மட்டுமே விவரங்களைப் பெற முடிந்தது. மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத் துக்கான உரிமைகளுக்குக்கூட லஞ்சம் கொடுக்கக்கூடிய சூழல் இருந்தது. 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் வந்தபிறகு நிலைமை தலைகீழானது. சாமானியனும் அரசு அலுவலகங்களை எளிதாக அணுகி தகவல்களை பெற முடிகிறது. நவம்பர் 11-ம் தேதி மதுரையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் … Read more
“வெள்ள நிவாரணமாக குறைந்தது ரூ.10,000 வழங்க வேண்டும்” – அண்ணாமலை
சென்னை: “வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது ரூ.10,000 ஆவது வழங்க வேண்டும். மாநில அரசை மத்திய அரசின் அதிகாரிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது ஒரு மாண்பு. திமுக செயல் இழந்து நிற்கிறது. அவர்கள் மோசமாகப் பேரிடர் காலத்தைக் கையாண்டு இருக்கிறார்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “மத்திய அரசின் அதிகாரிகள், மாநில அரசை விமர்சனம் செய்ய … Read more
குமரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு உதவிய காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் இடமாற்றம்: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: குமரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு உதவிய காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளரை இடமாற்றம் செய்யவும், வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சிலில் புகார் அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் பாலப்பள்ளத்தைச் சேர்ந்த ஹெல்டன் செல்வகுமார், ஜேக்கப் என்ற ஜேக்கப் செல்வராஜன் உட்பட 21 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பாலப்பள்ளத்தில் கருங்கல்லில் இருந்து குளச்சல் பிரதான சாலைக்கு செல்லும் பாதையை கருங்கல் காவல் ஆய்வாளர் இசக்கிதுரை, சார்பு ஆய்வாளர் மகேஷ் மற்றும் … Read more
“ஒன்றுபடாத, உருப்படாத கூட்டணி” – ‘இண்டியா’ அணி மீது எல்.முருகன் விமர்சனம்
புதுச்சேரி: “இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபடாத கூட்டணி, உருப்படாத கூட்டணி அது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சி புதுச்சேரி இசிஆர் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி கடந்த … Read more
நெல்லையில் சைவ, அசைவ படையல் சர்ச்சை: அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை: நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் கொடை விழா நடத்தப்படாதது தொடர்பான அவமதிப்பு வழக்கில் அறநிலையத் துறை இணை ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் இட்டேரி தாமரைச்செல்வி நடுத்தெருவைச் சேர்ந்த இ.சங்கரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: எங்கள் ஊரில் செல்வவிநாயகர் கோயில், நல்லாச்சியம்மன் கோயில், தளவாய் மாடசாமி கோயில், உச்சிமகாளியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் சைவ பிள்ளைமார் சமூக மக்களின் நலனுக்காக … Read more
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியீடு
சென்னை: “குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன. 15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023-ஆம் ஆண்டில் … Read more
டிஎன்பிஎஸ்சி-ஐ கலாய்த்த நெட்டிசன்கள்… உடனே குரூப்-2 ரிசல்ட் தேதி அறிவிப்பு!
TNPSC Group 2 Exam Result: குரூப்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
“தொடர் வலியுறுத்தலால் ரூ.775 கோடியில் அமைகிறது தொப்பூர் கணவாய் பகுதி சாலை” – தருமபுரி எம்.பி
புதுடெல்லி: தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க ரூ.775 கோடியில் சாலைகளை சீரமைப்பு பணிக்காக டெண்டர் கோரப்பட்டு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி எம்.பியான டி.என்.வி.செந்தில்குமார் இது குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியது: “நான் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் விபத்துகளை தடுக்க தீவிரமாக முயற்சித்தேன். இங்கு மாற்றுப் பாதை அமைத்து விபத்துகளை தடுக்க கோரிக்கை … Read more