சென்னை கடலில் எண்ணெய் கசிவு… கடலோர காவல் படை சொல்வது என்ன? – அதிர்ச்சி தகவல்!

Ennore Oil Waste In Sea: சென்னை எண்ணூர் முதல் காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் கசிவு உள்ளதாக கடலோர காவல் படை தகவல் வெளியிட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கி உள்ளது. சுமார் 10 பெட்டிகள் அதன் தடத்தில் இருந்து புரண்டதாக தகவல். தூத்துக்குடியில் இருந்து வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு – பரனூர் இடையே தடம்புரண்டது. இந்த ரயிலில் இரும்பு பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரயில் பாதையை சீர் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு ரயில் தடம்புரண்டுள்ளது. இதனால் சென்னை – தென் மாவட்ட ரயில் சேவை தாமதகமாக … Read more

கூடங்குளத்தில் இருந்து தமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம் தரப்பட உள்ளது? – விவரம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் திறனில் 2 அணு உலைகளில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்துக்கு தினமும் 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் விலை ரூ.3.50 முதல் ரூ.4 வரை உள்ளது. அங்கு தலா 1,000 மெகாவாட் திறனில், மேலும் 4 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3 மற்றும் 4-வது உலை களில் உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்குமாறு … Read more

பொள்ளாச்சி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த வெள்ளம்

பொள்ளாச்சி: ஆனைமலை பகுதியில் பெய்த கன மழையால் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு. அர்த்த நாரிபாளையம், கம்பாலபட்டி, மஞ்ச நாயக்கனுார், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. அதன் பின், கேரள மாநிலம் நோக்கி பயணிக்கிறது. பாலாற்றின் நீர்ப் … Read more

''வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை நாளை வெளியிடப்படும்'': தலைமைச் செயலாளர்

சென்னை: நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ” சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக … Read more

சென்னை வெள்ளம் |  ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கிய சிவகார்த்திகேயன்: அமைச்சர் உதயநிதி ட்வீட்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பதிவானது. இந்த மழையால் தலைநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பாக ரூ.10 லட்சம் … Read more

வரும் 29-ம் தேதி விசிக சார்பில் திருச்சியில் 'ஜனநாயகம் வெல்லும் மாநாடு' – திருமாவளவன் @ மதுரை

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற டிச.29 ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய … Read more

உடுமலை பகுதிகளில் கனமழை – காண்டூர் கால்வாயில் பெரும் சேதம் தவிர்ப்பு

உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழை, குறிப்பிட்ட நேரத்தில் குறைந்ததால் காண்டூர் கால்வாயும், ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் தப்பியது தெரியவந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த கன மழையால் காண்டூர் கால்வாய் ஒட்டிய பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு திறக்கப்பட்டுள்ள நீருடன், மழை நீரும் கலந்ததால் கால்வாய் நிரம்பி வழிந்தபடி சென்றது. மலைகளில் இருந்து கிடைக்கும் மழைநீர் செல்ல … Read more

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் வாகனங்களை பழுதுநீக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை – போக்குவரத்து துறை விளக்கம்

சென்னை: மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களை பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் … Read more