சென்னையில் மழை நின்றாலும் தற்போது தொடங்கியுள்ள புதிய பிரச்சனை!
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கம் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது பனிப்பொழிவு பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கம் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது பனிப்பொழிவு பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது.
சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள்முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வடசென்னை பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் வழக்கறிஞர் ஞானபானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது … Read more
சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பக தகவலை சுட்டிக்காட்டி, விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில் எஸ்சி மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், வன்கொடுமைகளின் எண்ணிக்கை 1,761 என என்சிஆர்பிஅறிக்கை தெரிவிக்கிறது. 2020-ல் 1274 ஆகவும்; 2021-ம் ஆண்டில்1377 ஆகவும் இருந்தது. 2022-ம்ஆண்டில் 56 எஸ்சி சமூகத்தவர் … Read more
சென்னை: மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கூறியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாமல் தவிக்கின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை … Read more
866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர்!: அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் … Read more
சென்னை: “அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிக்ஜாம் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. … Read more
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பதிவான மழையினால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழ்ந்துள்ளன. அதன் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நீரை வெளியேற்றுவது, அதனால் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இயங்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் … Read more
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச.7) சென்னை வருகிறார். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிசம்பர் 7) சென்னை வருகிறார். அவருடன் … Read more
சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: “மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து 4.12.2023 அன்று ஆணை வெளியிடப்பட்டது. இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், பின்வரும் கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன் விவரம்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி … Read more