சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்; கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் 

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், … Read more

புயல், கனமழை, பலத்த காற்று காரணமாக சென்னையில் 30 விமானங்கள் தாமதம்: 3 உள்நாட்டு விமானங்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை, பலத்த காற்றால் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று காலை 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், மாலை … Read more

மிரட்டும் மிக்ஜாம் புயல்; மிதக்கும் சென்னை – மக்கள் பாதுகாப்பாக இருக்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று (டிச.4) தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை புயல் மேலும் தீவிரமடைந்து … Read more

சென்னை மக்களே அலெர்ட்… நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்… வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

Michaung Cyclone Updates: மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகில் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது கொடுத்துள்ள அப்டேட்டை இங்கே காணலாம்.

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு | வங்கிகள், அரசு அலுவலகங்கள், டாஸ்மாக் இன்று செயல்படாது; பால் விநியோகம், மருந்தகம், உணவகம் இயங்கும்

சென்னை: புயல், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை மற்றும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்த 4 மாவட்டங்களுக்கும் செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4-ம் தேதி (இன்று) பொது விடுமுறை விடப்படுகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு … Read more

தீவிர புயலாகும் ‘மிக்ஜாம்’ சென்னையை நெருங்குகிறது: 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று இன்று மாலை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய வட தமிழககடலோரப் பகுதியை நெருங்குகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘மிக்ஜாம்’புயலாக வலுப்பெற்று … Read more

மிக்ஜாம் புயல் | இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் தங்கவைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு … Read more

உயரும் காய்கறி விலை: தக்காளி, வெங்காயம் மீண்டும் விலை கூடுவதால் மக்கள் கவலை

மதுரை: அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் காய்கறிகள் விலை அதிகரித்து வருவது, நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதிப்படைய வைத்துள்ளன. தமிழகத்தில் காய்கறிகள் உற்பத்தி நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. அதனால், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை கர்நாடகா, ஆந்திரா மட்டுமில்லாது அதிகளவு வடமாநிலங்களில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால், … Read more

மிக்ஜாம் புயல்: குளமாகும் காஞ்சிபுரம் – 24 மணி நேரத்தில் கொட்டிய 211 மிமீ மழை..!

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 211 மிமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் இருக்கும் 82 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியிருக்கின்றன.