கோவை நகைக்கடை கொள்ளை: 400 பவுன் நகை பறிமுதல்; திருடியவர் தப்பி ஓட்டம் – மனைவி கைது

கோவை: கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் பிடிக்க சுற்றிவளைத்தபோது, அவர் ஓட்டைப் பிரித்து தப்பியோடினார். இவ்வழக்கில் உடந்தையாக இருந்த அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்து, 400 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. கடந்த 28-ம் தேதி காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 பவுன் … Read more

மதுரை – சொக்கலிங்கபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: புகாரளித்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மறுப்பு

மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் தெரிவித்த விவசாயிகளுக்கு தற்போது பயிர்க்கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2015-ல் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் போலி ஆவணங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிர்க்கடன் … Read more

ஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து, பணியாளர்களை ஏற்றிக் கொண்டு, வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தை தொடர்ந்து அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு பேருந்தும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்தும் வந்து கொண்டு … Read more

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்க: சிஐடியூ

மதுரை: மதுரையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.சுந்தரமகாலிங்கம் தலைமையில் பொதுச்செயலாளர் டி.சிவக்குமார், பொருளாளர் ஜி.பொன்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின் ஆகியோர் கூறியதாவது: “மதுரை (தெற்கு) மாவட்டம் டாஸ்மாக் மதுபானக்கடை எண்-5505-ல் நவ.25-ம் தேதி … Read more

“இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்கச் செய்து மதவெறியை பாஜக விதைப்பது வேதனை” – திருமாவளவன்

திருவண்ணாமலை: இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்க செய்து மதவெறி உணர்வை பாஜக விதைத்து வருவது வேதனை அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் வெல்லும் ஜனநாயக மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, திருவண்ணாமலைக்கு இன்று (நவ.30) வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் திருச்சியில் டிசம்பர் 23-ம் தேதி, மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் … Read more

“மழைநீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியது ஆக்கும் சென்னை சாலைகள்” – அண்ணாமலை காட்டம்

சென்னை: “சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், … Read more

“சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை … Read more

‘வடிகால் வசதி இல்லை, ஒரு வாரமாக குடிநீர் இல்லை’ – வீறிட்டெழுந்த விருத்தகிரிக்குப்பம் கிராமத்தினர்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதனை ஊராட்சியில் உள்ளது விருத்தகிரிக்குப்பம் கிராமம். இங்கு இயங்கிவந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதையடுத்து இக்கிராம மக்கள், அங்குள்ள ஊராட்சித் தலைவரிடம் தெரிவிக்க, அவர், ‘நீங்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. நான் ஏன் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்?’ என்று கூறியதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவார காலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் விருத்தாசலம் – முதனை சாலையில் … Read more

ஆட்டோவில் பணத்தை தவறிவிட்ட வெளிநாட்டினர்..நெகிழ வைத்த இளம் ஆட்டோ ஓட்டுனரின் செயல்!

வெளிநாட்டினர் தனது ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரின் செயல், பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.