தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

சென்னை: மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்படுகின்றன. இதற்கிடையே, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது … Read more

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக டிச.2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

தமிழகத்தில் மணல் விற்பனையில் பெரிய அளவில் ஊழல்: பாஜக குற்றச்சாட்டு

சேலம்: ‘அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெரிய அளவில் தமிழகத்தில் ஊழல் நடந்துள்ளது,’ என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்ட பூர்ணசக்தி கேந்தர பொறுப்பாளர்கள் மாநாடு புதன்கிழமை நடந்தது. இதில், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் … Read more

மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னை: மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா டோல் ஃப்ரி எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.29) அன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை … Read more

சென்னையில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மழை விடுமுறை!

சென்னை: சென்னையில் புதன்கிழமை தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், நாளை (நவ.30 – வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், புதன்கிழமை காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் … Read more

“விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும்” – இயக்குநர் அமீர்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்றும். அவருக்கு அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை – மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் … Read more

சென்னை, புறநகரில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று … Read more

வானிலை முன்னெச்சரிக்கை: சென்னையில் 2 மணி நேரத்துக்கு தீவிர மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் இன்று (நவ.29) இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், புதன்கிழமை காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் … Read more

உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்

Uttarakhand Tunnel Collapse: உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது எப்படி? தமிழ்நாடு திருங்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனத்தின் பங்கு என்ன? என்பதை இங்கு முழுமையாக பார்ப்போம்.