“கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 பேர் தேர்வாகியிருக்கும் நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; “தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் … Read more

உதகையில் தொடர் மழை காரணமாக உடல் உபாதைகளால் மக்கள் அவதி

உதகை: உதகையில் மழை, பனிமூட்டமான காலநிலைகளால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை, சில நேரங்களில் மழையின்றி பனிமூட்டம் ஆகிய கால நிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதுபோன்ற மாறுபட்ட கால நிலைகளால் பொது மக்களுக்கு தலை வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட … Read more

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு… மன்னார்குடியில் அண்ணாமலை சீற்றம்!

Annamalai Latest News: பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும், தான் செய்ததாக கூறி  திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது என மன்னார்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். 

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு: நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தர பிரதேசமுன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி,மகன் அஜயா சிங் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். உத்தர பிரதேச முதல்வராகவும், மத்திய நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி கடந்த 1989-ம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். 11 மாத அவரது … Read more

சமூகநீதி தழைக்க வேண்டுமானால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சமூகநீதி தழைக்க வேண்டுமானால், தாமதப்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர், சிலை திறப்பு விழா பேருரை நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 … Read more

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.1-ம் தேதி புயலாக வலுப்பெறும் – தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிச.1-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிச.3-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று (நவ.27) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த … Read more

மதுரை | நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாநகரில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை – தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் ஜானகி ஜூவல்லர்ஸ் கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் தீ பரவிய நிலையில் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இருந்தும் இந்தக் கடையில் பணியாற்றி வந்த 49 வயதான மோதிலால், மூன்றாவது மாடியில் சிக்கிக் … Read more

நாகஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்

மதுரை: நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 90. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்தவர். இவர்களது குழுவில் தேவூர் சந்தானம் மற்றும் திருவிடைமருதூர் வெங்கடேசன் ஆகியோர் தவில் வாசித்துள்ளனர். காரைக்குடியில் சகோதரர்கள் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி இணைந்து திருமண நிகழ்வில் நாகஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மூலம் பெற்றுள்ளனர். இந்தப் படம் … Read more