''பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதிக்க வேண்டும்'' – மத்திய நிதியமைச்சரிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சிவகாசி: 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டான்பமா) தலைவர் கணேசன் அளித்த மனுவில், “பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்ததற்காகவும், சட்ட விரோத பட்டாசு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகவும் நன்றி. கடந்த செப்டம்பர் 22-ம் … Read more

“நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்” – உதயநிதி பேச்சு

ஈரோடு: நீட் தேர்வு பிரச்சினை என்பது இளைஞரணியின் பிரச்சினை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்சினை. நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2600 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு, தலா ரூ 10 ஆயிரம் வீதம், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் … Read more

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழக மீனவரை மீட்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவரவும், ஓமனில் மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த மீனவக் குழுவினரின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி … Read more

சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை முடிவு

சென்னை: சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் பெண்கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளும் தமிழக சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரின் செயல்களையும் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பை மீறி அவ்வப்போது சிறைக்குள் … Read more

நாங்குநேரியில் மீண்டும் சம்பவம்… நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவன் கைது – முழு விவரம்

Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

“த்ரிஷாவைப் பற்றி நான் தவறாகப் பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது” – மன்சூர் அலி கான்

சென்னை: நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை த்ரிஷா பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் சென்னையில் இன்று (செவ்வாய்) மன்சூர் அலி கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நடிகை த்ரிஷா … Read more

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் அதிமுகவில் இணைப்பு: ஆர்.பி.உதயகுமார் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

மதுரை: உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியால் அதிமுகவில் இணைந்தார். இது அமமுக உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை திமுகவில் சேர்க்கும் நல்ல வாய்ப்பை அக்கட்சி கோட்டை விட்டுள்ளதாக அக்கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். இவர், அமமுக தலைமைக் கழக செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரன் புதிய … Read more