பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார்..! என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண்

கள்ளத் துப்பாக்கி வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் ஆறு மாதம் தேடியும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார். என்கவுண்டருக்கு பயந்து நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசு செலவில் கட்டித் தரப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னர் தாம்பரம் வட்டத்திலும் பிறகு, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பிரித்து இரண்டு மாவட்டங்களாக அமைத்ததால் ஆலந்தூர் வட்டம் என்று … Read more

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு: 9,000 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் 9,776 பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14-வதுபட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சோ.ஆறுமுகம் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார். பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 485 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நேற்றைய விழாவில் 3,318 … Read more

மதுரை, கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை

மதுரை: மழை காரணமாக மதுரை மற்றும் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை, நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பொழிவு பதிவானது. இதன் காரணமாக மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இதே போல கோவை மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் … Read more

சனாதன வழக்கு: 'நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.  

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (நவ. 9, … Read more

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்கும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கும் திட்டம் எதுவும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் … Read more