கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்: செய்திகளை சுட்டிக்காட்டி முதல்வர் பெருமிதம்

சென்னை: கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் இருப்பதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக ஊடகப்பதிவில் கூறியிருப்பதாவது: கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் வெளியான ஒரு செய்தியில், ‘‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் சிஎல்ஏடி (CLAT) தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் … Read more

கிருஷ்ணகிரியில் தொடர் மழை – வேப்பனப்பள்ளி அருகே மின்னல் தாக்கி 8 ஆடுகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின் போது, வேப்பனப்பள்ளி அருகே மின்னல் தாக்கியதில், 8 ஆடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்த போதும், மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு … Read more

தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை கட்டுப்பாடு – உதவி எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்ச சென்னை காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது  

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 11மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (நவ. 8, 9) இடி மின்னலுடன் கூடிய, லேசானது … Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2, 2ஏ உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியால், குரூப் 2, … Read more

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு … Read more

சென்னை வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை பரங்கிமலையில், அரசுக்கு சொந்தமான 41,952 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் … Read more

“மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது” – முத்தரசன்

சென்னை: “மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது. அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜக ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. குறிப்பாக மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், பொருள் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் அதானி குழும நிறுவனங்களின் அதிகார எல்லைக்கு … Read more

“நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்க வேண்டும்” – கட்சியினரிடம் கமல்ஹாசன் விருப்பம்

சென்னை: “நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும்” என பிறந்தநாள் விழாவில் கட்சியினரிடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாள் சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று கட்சியினரிடையே உரையாற்றிய கமல்ஹாசன், “நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அதை நோக்கி நகரந்துகொண்டிருக்கிறோம். அதற்கான எல்லா முனைப்பையும் மேற்கொள்ள வேண்டும். இன்னும் … Read more