வாகன ஓட்டிகளே உசார்! இந்த வேகத்திற்கு மேல் சென்றால் ரூ. 1000 அபராதம்!

New Speed Limit: விபத்துகளை தடுக்கும் பொருட்டு கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது.  

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மருத்துவர்கள் வெள்ளை அங்கி பேரணி: சென்னையில் 16-ம் தேதி நடக்கிறது

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்கள் வரும் 16-ம் தேதி சென்னையில் வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்தவுள்ளனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் உட்பட 8 அரசு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பை தொடங்கியுள்ளன. இந்த கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்கள் கே.செந்தில், பி.பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங் கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் … Read more

வருமான வரி, அமலாக்க துறைகள்தான் பாஜகவின் கூட்டணி கட்சிகள்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: அரசியல் பழிவாங்கலுக்கான பாஜகவின் கூட்டணிகட்சிகள்தான் வருமான வரித் துறையும், அமலாக்கத்துறையும். இவற்றின் சலசலப்பு, அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்று சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை மண்டல திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடந்தது. இதில், சென்னை தெற்கு மற்றும் கிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் வாக்குச் சாவடி … Read more

மழைக் காலத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்

மதுரை: கும்பகர்ணனை போல் அரசு தூங்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக பூத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: ”தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையே தமிழகத்துக்கு 45% … Read more

புதுச்சேரி | முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்கவராக திகழ்ந்த முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த … Read more

நாகா சமூகத்தை பகிரங்கமாக இழிவுபடுத்துவதா?- ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்

சென்னை: “நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். அத்துடன், காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், பேசும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தில் உள்ள ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற வகையிலேயே செயல்படுகிறார். … Read more

மதுரை காமராசர் பல்கலை.யில் தொடரும் சம்பளம், ஓய்வூதியப் பிரச்சினை: உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த பேராசிரியர்

மதுரை: மதுரை காமராசர் பல்கலை.யில் பணிபுரியும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்திற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.10.50 கோடி தேவை இருக்கிறது. இதற்கான நிதியை சேகரிப்பதில் பல்கலை நிர்வாகம் மாதந்தோறும் திணறுகிறது. போதிய வருவாய் இன்றி தொடர்ந்து இப்பல்கலை நிதி நெருக்கடியை சந்திப்பதே இதற்கு காரணம். கடந்த மாதத்திற்கான சம்பளம் , ஓய்வூதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை. பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் சம்பளம், ஓய்வூதியத்தை … Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்பு தானம்: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் @ திருச்செங்கோடு

நாமக்கல்: விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருச்செங்கோடு அருகே தோக்கவாடி குச்சிபாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆசிரியை மஞ்சுளா. இவர் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 3-ம் தேதி எஸ்பிபி காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது விபத்தில் சிக்கிய … Read more

புதுச்சேரி தொழிற்சாலை தீ விபத்து: 14 பேர் காயம்; 4 பேர் கவலைக்கிடம் – பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் பிரபல மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கீ 14 பேர் காயம் அடைந்தள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புதுச்சேரி அடுத்த பெரியகாலாப்பட்டு மாத்தூர் சாலையில் மாத்திரை தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி, தமிழகம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். … Read more