எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் வழக்கு

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக … Read more

மறைமலை நகரில் 6 மாதங்களாக பயன்பாட்டுக்கு வராத சமுதாயக் கூடம்: அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சியில் ரூ.5.85 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை முதல்வர் திறந்து வைத்து 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி காந்தி நகர் பகுதியில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.85 கோடி செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதற்கு மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் என பெயர் சூட்டி, கடந்த ஏப்.29-ல் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சமுதாயக்கூடம் … Read more

காதலிக்க சொல்லி மகளுக்கு தொல்லை..! கண்டித்த தந்தை..! கொலையில் முடிந்த சம்பவம்!

ஒருதலையாக காதலித்ததை எச்சரித்த பெண்ணின் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு ஆள் மாறி வேறொருவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பகீர் பின்னணியை தற்போது காணலாம்.   

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய4 பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார்படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய … Read more

ரவுடி 'கருக்கா' வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக பிரமுகர்: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. இவரை ஏற்கெனவே சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பாஜக அலுவலகம் முன்பு இதேபோல தாக்குதல் நடத்திய கருக்கா வினோத்தை பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்து இருப்பது வேறொரு … Read more

தமிழகத்தில் அக். 29, 30-ல் கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்தமிழகப் பகுதிகளில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 27) ஓரிரு இடங்களிலும், வரும் 28, 29, 30, 31 மற்றும் நவ. 1 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் … Read more

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநரிடம் சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. அனுமதி பெற்று வருபவர்களும்,பலத்த சோதனைக்குப் பிறகே ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட … Read more