‘வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில் சிறப்பு அக்கறை கொள்க’ – கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அறிவுரை

சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024, ஜன.1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 27.10.2023 அன்று வெளியிட உள்ளது. அக்.27 முதல் டிச.9ம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும், … Read more

ஆளுநர் மாளிகை விவகாரத்தை பெரிதாக்கும் பாஜக… எங்களுக்கு கவலையில்லை – ரகுபதி பதிலடி

Raj Bhavan Petrol Bomb Issue: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற சம்பவத்தை பாஜக அரசியலாக்கினாலும் ஆக்கட்டும் என்றும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் 

சென்னை: “தமிழக காவல்துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்”, என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வருகைதர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி … Read more

அண்ணன் கொலை? அம்மா – தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்!

Tamil Nadu Latest News: அண்ணன் இறந்த இரண்டே மாதத்தில் தங்கையும் தாயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல்46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனை அரசு தொடர்ந்துபாதுகாத்து வருகிறது. முந்தையஅரசு விட்டுச்சென்ற கடும் … Read more

ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், எக்ஸ் வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: இன்று (அக்.25) பிற்பகல் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் பிரதான வாயில் வழியாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், ராஜ்பவனில் 2 பெட்ரோல் குண்டுகளைவீசி … Read more

ஆளுநர் மாளிகை முன்பு நடந்தது என்ன? – கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிண்டி சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆளுநர் மாளிகை நுழைவாயிலை நோக்கி ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீச முயன்றார். அப்போது, பாதுகாப்பில் இருந்த போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, அவர் கையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து வீசினார். அந்த பாட்டிலின் திரியில் மட்டும் … Read more

‘தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பில்லை’: ஆளுநர் தமிழிசை, அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை நுழைவுவாயில் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசைமற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தைவன்முறைகளும், செயல் வன்முறைகளும் அண்மை காலமாகஅதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல. மேலும் ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் … Read more