முன்விரோதத்தில் இளைஞர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கலைவாணன் என்ற இளைஞரை, முன்விரோதம் காரணமாக பி.வி.காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்ராஜ் கடந்த 2017 செப்டம்பரில் கற்கள் மற்றும் மூங்கில் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவரையும் எம்கேபி நகர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 16-வது கூடுதல் அமர்வு நீதிபதிகு.புவனேஷ்வரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதுகாவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்துநீதிபதி, குற்றச்சாட்டுகள் … Read more

சாலையில் விளக்கு எரியாததால் விபத்து: பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவு

மதுரை: மதுரையில் தெரு விளக்கு எரியாததால், சாலை தடுப்பில் கார் மோதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க, மதுரை மாநகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கலைநகர் முதல் தெருவைச் சோந்த ஷைனி மேஷாக் என்பவர், மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் எனது மகளுடன் கடந்த 7.1.2022 அன்று இரவு 8 மணியளவில் காரில் சென்றேன். மதுரை பீ.பீ.குளம் உழவர் சந்தையின் அருகில் சென்றபோது, தெரு விளக்குகள் எரியாததால் … Read more

போதையில் வாகனம் ஓட்டிய காவலர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம், வேளச்சேரியில் உள்ள அரசு வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தில், பழுது பார்க்கும் பணிக்கு விடப்பட்டிருந்தது. பழுது பணி முடிவடைந்ததும், கடந்த 19-ம் தேதி புழல் சிறையில் காவலராக பணிபுரியும் ஹரிஹரன் (48), ஆம்புலன்ஸ் வாகனத்தை வேளச்சேரியில் இருந்து புழல் சிறைக்கு ஓட்டிச் சென்றார். புழல் லட்சுமிபுரம் அருகே வந்தபோது, ஆம்புலன்ஸ் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில், ஹரிஹரனும், காரை ஓட்டி வந்த ஜெயபாலனும் காயம் … Read more

நந்தம்பாக்கத்தில் ரூ.308 கோடியில் கட்டப்படும் மாநாட்டு அரங்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலர்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் கட்டப்படும் கூடுதல் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்க கட்டிட கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் 9 லட்சம் சதுர பரப்பளவில் 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், 1,300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளைப் … Read more

மழைக்கால நோய்களைத் தடுக்க பட்டினப்பாக்கத்தில் மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் பொதுமக்களால் கொட்டப்பட்ட குப்பைகள் மற்றும்அடர்ந்திருந்த புதர்செடிகள் ஆகியவற்றை, தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், அப்புறப்படுத்தி, அவ்விடத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக் … Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

உதகை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் உதகை அரசு கலை கல்லூரியில் பணியமர்த்தக்கூடாது என்று, தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழகம், கல்லூரி ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி.) ஆசிரியர் சங்க கோவை மண்டல செயற்குழு கூட்டம், உதகை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கிளை தலைவர் விஜய், பொருளாளர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் … Read more

கோவை | ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூ வகைகள், பழங்கள் விற்பனை தீவிரம்

கோவை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளையும், விஜயதசமி பண்டிகை நாளை மறுநாளும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பூ வகைகள்,பழங்கள் விற்பனை நேற்று தீவிரமாக நடைபெற்றது. இதனால் பூ மார்க்கெட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோவை பூ மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி கிலோ அடிப்படையில், செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160 முதல் ரூ.320 வரையும், கலர் செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், பட்டன் … Read more

ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவற்றின் மூலம் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்காக தொடர் விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு (அக்.21, 22) விடுமுறை இருப்பதால் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் … Read more

அமர்பிரசாத் ரெட்டி கைது எதிரொலி… உடனே ஜே.பி. நட்டா அமைத்த குழு – பின்னணி என்ன?

Tamil Nadu Latest: தமிழகத்தில் ஆளும் திமுக அரசால் தமிழ்நாடு பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (அக். 22) அமைத்துள்ளார்.