“சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: “இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய … Read more

செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டில் செப்.30-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடி கலந்தாய்வு மூலம்எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் … Read more

‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை: ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ‘விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் … Read more

ஆன்மிக உலகுக்கு பேரிழப்பு: பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மிக உலகுக்கு பேரிழப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமான செய்தி வேதனை தருகிறது. கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையைக் கொண்டு வந்து, பாமர மக்கள்கூட அம்மன் சந்நிதானத்தில் சென்று வழிபாடு நடத்தும் வகையில் புரட்சி செய்தவர். அவரது மறைவு ஆன்மிக உலகில் ஈடுசெய்ய முடியாத … Read more

“ரங்கசாமி ஒரு நிமிடம் கூட புதுச்சேரி முதல்வராக நீடிக்கக்கூடாது” –  நாராயணசாமி காட்டம் 

புதுச்சேரி: “புதுச்சேரி முதல்வராக ஒரு நிமிடம் கூட ரங்கசாமி நீடிக்கக்கூடாது. அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சராக சந்திரபிரியங்கா நீடிக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என மக்களிடம் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய ரங்கசாமி 10 நாட்களாக எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார். சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்பட்டதா? … Read more

வால்பாறையில் ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்குள்ள நல்லகாத்து ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கூழாக்கல் ஆறு, சோலையாறு ஆறு, நல்லகாத்து ஆறு ஆகியவற்றில் குளிப்பது வழக்கம். இன்று (அக்.20) கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு … Read more

மீண்டும் பழைய பாரம்பரிய கல் கட்டிடத்துக்கு மாறும் மதுரை ஆட்சியர் அலுவலகம்: புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

மதுரை. தமிழகத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்ய வந்த பிரிட்டிஷார் மீனாட்சிம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மதுரை நகரின் அழகை கண்டு வியந்தனர். அதனாலேயே, மதுரையை மையமாக கொண்டு தென் பகுதிகளை பிரிட்டிஷார் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி செய்யத் தொடங்கினர். அதற்காக தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1916ஆம் ஆண்டு பிரம்மாண்ட கல்கட்டிடத்தை கட்டினர். விசாலமான அறைகள், மாடங்கள், நடைபாதைகளுடன் அரண்மனைபோல் இந்த கட்டிடத்தைக் கட்டினர். தற்போது இந்தக் … Read more

காவிரி விவகாரம் | சட்டம், அரசியல் ரீதியில் தைரியமான நடவடிக்கை தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தருமபுரி: காவிரி விவகாரத்தில் சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இரு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (அக்.20) நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி … Read more

“எங்களுக்கு நாங்களே போட்டி; வேறு யாரும் போட்டியில்லை” – சீமான்

தருமபுரி: “சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலமிட்ட பெருமை கொண்ட தமிழனத்தை 60 ஆண்டுகால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த விட்டுள்ளது” என தருமபுரியில் நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(அக்.20) தருமபுரி வந்தார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின்மீது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது. … Read more