மீண்டும் களமிறங்கும் ஆசையில் தொகுதிக்குள் வட்டமடிக்கும் சிட்டிங் எம்.பி.க்கள் – இது புதுக்கோட்டை நிலவரம்

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் ஆர்வத்தில் தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பிக்கள் மக்கள் சந்திப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகள் சிவகங்கையுடனும், விராலிமலை தொகுதி கரூருடனும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 4 மக்களவைத் தொகுதிகளில் திருச்சி (சு.திருநாவுக்கரசர்), கரூர் (செ.ஜோதிமணி), சிவகங்கை (கார்த்தி சிதம்பரம்) ஆகிய தொகுதிகளில் … Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத் துறை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு … Read more

ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம், பூந்தமல்லியில் இருந்து அரசு பேருந்துகள்!

Ayudha Puja Special Buses: ஆயுதபூஜை, விஜய தசமியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏதுவாக தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.   

சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை ‘அமைச்சர்’ ஆக தொடங்கிவைத்த சந்திர பிரியங்கா!

காரைக்கால்: காரைக்கால் அருகே சுய உதவிக் குழு மகளிர் தயாரித்த பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சியை, ராஜினாமா அறிவிப்புக்குப் பின்னர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித் துறையின், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், குரும்பகரம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், சுய உதவிக் குழு பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்ட கண்காட்சி இன்று (அக்.19) நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா … Read more

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள். இவர், ஆசிரியராக பணிபுரிந்தவரும்கூட. ஆசிரியர் … Read more

தாமதமாக வந்த அண்ணாமலை! கை கொடுக்க வந்த முதியவரை தள்ளிவிட்ட மத்திய ரிசர்வ் போலீஸ்!

என் மண் என் மக்கள் யாத்திரையின் 45 வது நாளான நேற்று, தமிழக பாஜக தலைவர் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.   

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது: சத்குரு வாழ்த்து

கோவை: ஈஷாவின் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய அமைச்சகத்துடன் இணைந்து தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இது குறித்து ஈஷா வெளியிட்ட தகவல்: டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் ஃபயஸ் அகமது கிட்வாய் இவ்விருதை வழங்கி பாராட்டினார். வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவரும் தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் மற்றும் ஈஷா … Read more

மதுரை மாநகராட்சி | “4 மாதங்களுக்கு ஒருமுறை ஆணையாளரை மாற்றுவீர்களா?” – அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மதுரை: ‘‘உங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் 4 மாதங்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆணையாளரை மாற்றுவீர்களா?’’ என அதிமுக கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் திமுக கவுன்சிலர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்ற மதுபாலன் உடனடியாக நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றார். மாநகராட்சி விவரங்கள் எதுவும் அவருக்கு தெரியாததால் அவர் விவாதங்களில் … Read more