ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம் – சாமானியர்களுக்கும் சாத்தியம்’ என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது. 

கனமழை காரணமாக திண்டுக்கல், கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல்: கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை உத்தரவைப் பிறப்பித்தனர். இதேபோல் சிவகங்கையில் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை தலைமை ஆசிரியரே எடுக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனியில் மழை தொடர்வதால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், … Read more

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள், மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்கப்படும்’ என்று, … Read more

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (அக்.16, 17) மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள்,நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், … Read more

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்.15) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் … Read more

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிப்பா? – தமிழக காவல் துறை மறுப்பு

சென்னை: தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் அது தொடர்பாக தமிழக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வேலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக அண்மையில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு ஆகும். … Read more

அடுத்த 15 ஆண்டுகளுக்கு AI சார்ந்த துறைகளில் அதிக வாய்ப்பு: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு

மதுரை: அடுத்த 15 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு துறைகளில் அதிக வாய்ப்பு இருக்கும் என தியாகராசர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேசினார். மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிநாத ராஜா வரவேற்றார். கல்லூரி தலைவர், தாளாளர் ஹரி தியாகராசன் தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, உலகளவில் ‘டைம்ஸ் உயர் கல்வி’ நடத்திய ஆய்வில் … Read more

“2024 தேர்தலில் 400+ தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்” – எல்.முருகன் நம்பிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி-க்கு பாராட்டு விழா மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 15) அன்று நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: பாஜக தியாகத்துக்கு பெயர் போன கட்சி. … Read more

பரமத்தி வேலூர் அருகே 2000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கொந்தளம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 2000 வாழை மரங்கள் மற்றும் 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம். இவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் 1750 வாழை மரங்கள் நடவு செய்து பராமரிப்பு செய்து வந்துள்ளார். இம்மரங்கள் அனைத்தும் ஆறு மாத கால … Read more