மிக்ஜாம் புயல்: 200 மிமீ மழை கொட்டப்போகுது.. வர்தா, கஜா போல் இருக்குமா? வெதர்மேன் அப்டேட்

மிக்ஜாம் புயலால் 200 மிமீ மழை கொட்டக்கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான், அதிக காற்று இல்லாமல் மழை கொட்டும் என தெரிவித்திருக்கிறார்.  

குஷ்புவின் பேச்சில் தவறு இருப்பதாக தெரியவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து

ஈரோடு: நடிகை குஷ்பு ‘சேரி’ குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை, என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில், தமிழகம் – புதுச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக அரசு நிறைவேற்றிய மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், … Read more

மிக்ஜாம் புயல்: எப்போது உருவாகிறது? எத்தனை கிமீ வேகத்தில் கரையை கடக்கும்? ரவுண்ட்அப்

வங்க கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாற இருக்கிறது.  

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், முதல்வருடன் பேசி தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் 10 … Read more

விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.  

மழைக்காலத்தையொட்டி தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும், 100 இடங்களில் மருத்துவ காப்பீடு முகாம்களும் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. … Read more

கலைத் துறையில் 'அஷ்டாவதானி' பத்மா சுப்ரமணியம்: சங்கீத நாடக அகாடமி தலைவர் சந்தியா புகழாரம்

சென்னை: பிரபல பரதநாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியத்தின் 80-வது பிறந்தநாளையொட்டி, ‘பத்மா 80’ என்ற விழா, சென்னை நாரதகான சபாவில் நேற்று முன்தினம்கொண்டாடப்பட்டது. நிருத்யோதயா, நாரத கான சபா, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் – ஜானகி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில், பத்மா சுப்ரமணியத்தின் பரதக்கலை மேன்மை குறித்து சதாவதானி ஆர்.கணேஷ், அர்ஜுன் பரத்வாஜ் இணைந்து எழுதிய ‘நயன சவன’ எனும் ஆங்கில நூலை, சங்கீத நாடக … Read more

திண்டுக்கல் | ரூ.20 லட்சம் லஞ்ச பணத்துடன் காரில் சென்ற அமலாக்க துறை அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்து சுரேஷ்பாபு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், … Read more

கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்? – அமைச்சர் பதில்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திப்பிராஜபுரம் மற்றும் பம்பப்படையூரில் ரூ. 39.04 லட்சம் மதிப்பிலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். எம்பிக்கள் எஸ்.கல்யாணசுந்தரம், செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், துரை.சந்திரசேகரன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் பங்கேற்று, திப்பிராஜபுரம் மற்றும் பம்பப்படையூர் ஆகிய 2 ஊராட்சிகளில் தலா ரூ.19.52 லட்சம் மதிப்பில் கட்டப்படும் பால் … Read more