தமிழக செய்திகள்
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.1-ம் தேதி புயலாக வலுப்பெறும் – தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்
சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிச.1-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிச.3-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது … Read more
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று (நவ.27) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த … Read more
மதுரை | நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மதுரை: மதுரை மாநகரில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை – தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் ஜானகி ஜூவல்லர்ஸ் கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் தீ பரவிய நிலையில் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இருந்தும் இந்தக் கடையில் பணியாற்றி வந்த 49 வயதான மோதிலால், மூன்றாவது மாடியில் சிக்கிக் … Read more
நாகஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்
மதுரை: நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 90. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்தவர். இவர்களது குழுவில் தேவூர் சந்தானம் மற்றும் திருவிடைமருதூர் வெங்கடேசன் ஆகியோர் தவில் வாசித்துள்ளனர். காரைக்குடியில் சகோதரர்கள் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி இணைந்து திருமண நிகழ்வில் நாகஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மூலம் பெற்றுள்ளனர். இந்தப் படம் … Read more
'ரூ.4,500 கோடி மோசடி?' உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு vs அமலாக்கத்துறை – நாளை தீர்ப்பு!
TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் குட்டையாக மாறிய சாலையில் வடியாத மழைநீரால் மக்கள் அவதி
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் சாலைகளின் தரத்துக்கு இந்த படங்களே சாட்சி என்கின்றனர் பலர். இதுபோன்று பல சாலைகள் குண்டும், குழியுமாகவே இருக்கின்றன. பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம்போல், மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரும், சாக்கடை நீரும் மழை ஓய்ந்த பின்னரும் திருப்பூர் மாநகர மக்களை கடும் அவதிக்குள்ளாக்குகிறது. ஒவ்வொரு முறையும் மழை வந்து சென்ற பிறகு, 4 நாட்கள் தீராத வேதனையில் சிக்கித்தவிப்பது என்னவோ அப்பாவி மக்கள்தான். ஸ்மார்ட் சிட்டி நகரமாக திருப்பூர் மாநகராட்சி திகழ வேண்டும் … Read more
மதுரையில் ஆர்பி உதயக்குமார் கைது – பின்னணி இதுதான்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசனத்துக்கு நீர் கேட்டு மதுரையில் விவசாயிகள் போராட்டம்: சாலை மறியலில் தள்ளுமுள்ளு பரபரப்பு
மதுரை: மேலூரில் பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு, ஒருபோக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை மேலூர் பகுதிக்கு ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, வலியுறுத்தி ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி,மேலூரில் ஒரு போக விவசாயிகள் திரண்டனர். மேலூர் மூவேந்தர் திருமண மண்டபம் முதல் நீர்வளத்துறை அலுவலகம் வரையிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர். பின்னர், அவர்கள் … Read more