அரசமைப்புச் சட்ட நாளில் நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை திறக்கப்படும். இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம். … Read more

தேசிய கல்வி கொள்கையை திமுக அரசு எதிர்க்கவில்லை, கடிதத்தை காட்டவா – மத்திய இணை அமைச்சர்

தமிழ்நாடு அரசு தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை, அதில் சில மாறுதல்களை தான் கேட்டுள்ளனர் என மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சார்கர் தெரிவித்துள்ளார்.   

''காவிரி நீர் இல்லாததால் நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துள்ளது'': அண்ணாமலை குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாததால், நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (நவ.26) காலை வந்தார். திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவிரியில் நடைப்பயணத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 8-ம் தேதி வரை 8.25 … Read more

டெட்ரா பேக்கில் மது விற்றால் போராட்டம்: அன்புமணி, ஜி.கே.வாசன் எச்சரிக்கை

டெட்ரா பேக் மதுவை விற்பனைக்கு கொண்டு வந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றுபாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புமணி: தமிழகத்தில் மதுவகைகளை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக, காகிதக் குடுவைகளில் அடைத்து (டெட்ரா பேக்) விற்கப்பட உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். இது தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும். உடலுக்கு … Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அதிகரிப்பு

சென்னை: பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (நவ.27) முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக … Read more

இலவச பேருந்துகளில் பெண் பயணிகளிடம் வயது, சாதி உட்பட புள்ளிவிவரம் சேகரிப்பதை நிறுத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசின் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களிடம் சாதி, வயது, செல்போன் எண் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் சேகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கை: கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களது பெயர், வயது, கைபேசி எண், சாதி போன்ற 15 விவரங்களை நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறைவழங்கியுள்ள படிவங்களில் அவற்றை பூர்த்தி … Read more

அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகிறது: டிச.1 வரை மழை நீடிக்கும்

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. தமிழகத்தில் வரும் டிச.1-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். கிழக்கு … Read more

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரி வழக்கு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை அரசியல் சாசனத்தின் 8-வது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால் … Read more

சிவில் சர்வீஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் … Read more