கயத்தாறு, கழுகுமலையில் மழையால் பயிர்கள் சேதம்
கோவில்பட்டி: கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 22-ம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டனர். இதுபோல கயத்தாறு ஊராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் கண்மாயின் மேல் பகுதி உடைந்ததையடுத்து, அதன் அருகே உள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர், உளுந்து பயிர் சேதமடைந்துள்ளது. … Read more