எம்.எஸ்.சுவாமிநாதன் பயின்ற கும்பகோணம் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி

கும்பகோணம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானதையொட்டி, கும்பகோணத்தில் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98). இவர் 1935-ம் ஆண்டு முதல் 1938-ம் ஆண்டு வரை 6-ம், 7-ம், 8-ம் வகுப்புகளை நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியிலும், 1938-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டு வரை 9-ம் மற்றும் 10-ம் வகுப்பைச் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் கல்லூரி படிப்பை அரசு … Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “விவசாய வளர்ச்சிக்கு புதிய பாதையை வித்திட்டவர்” – ஜி.கே.வாசன்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், ஏன் உலகத்துக்கே பேரிழப்பாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.எம்.எஸ்.சுவாமிநாதன் “பசுமை புரட்சியின் தந்தை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். இன்று விவசாயத்தில் பல்வேறு வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றால் அதற்கு அடித்தளம் … Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “பட்டினி இல்லாத இந்தியாவே தனது கனவாக முழக்கமிட்டவர்!” – வைகோ

சென்னை: “பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த அறிவியல் அறிஞரான எம்.ஸ்.சுவாமிநாதனின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என்று பலராலும் அழைக்கப்பட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், 98 வயதில் முதுமை காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது தந்தையார் ஒரு … Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “இந்தியா அரிசி ஏற்றுமதி நாடாக முக்கியக் காரணமானவர்” – அன்புமணி

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு, இந்தியாவுக்கு பேரிழப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் வேளாண் ஆராய்ச்சியாளர் எம்.எஸ். சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உணவுக்காக வெளிநாடுகளில் இருந்து உணவு தானிய இறக்குமதியை நம்பியிருந்த இந்தியா‌ இன்று உலகில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி … Read more

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்பி பொறுப்பேற்பு

புதுச்சேரி: வருகின்ற 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 375 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நல்ல காலக்கட்டத்தை நோக்கி நாம் இருக்கின்றோம் என்று புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக 8 ஆண்டுகள் இருந்த சாமிநாதன் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்பி நியமிக்கப்பட்டார். அவரை புதுச்சேரி மாநில பாஜக தலைவராக அறிவித்து கட்சியின் … Read more

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடை பின்புறம் உள்ள தகர செட்டில் மாலை 5:30 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீயானது கடைக்கும் பரவி பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், இந்திய ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு, பசிப்பிணி ஒழிப்பு … Read more

ரூ.1.70 கோடி வாங்கிக்கொண்டு வீடு கட்டித் தருவதாக ஏமாற்றிய ஒப்பந்ததாரர்: நடிகர் பாபி சிம்ஹா குமுறல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் ரூ.1.70 கோடியில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பாபி சிம்ஹா கூறினார். கொடைக்கானலைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. இவர் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் ஒப்பந்ததாரர் ஜமீர் மூலம் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், வீடு கட்டுவதில் ஒப்பந்ததாரருக்கும், பாபி சிம்ஹாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால், கட்டிடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக, இருவரும் மாறி மாறி … Read more

அக்.3-ல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்த தமிழக பாஜக திட்டம்

சென்னை: வரும் அக்டோபர் 3-ம் தேதி, சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி முறிவு: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, பாஜக தலைமையிலான … Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பரிந்துரைத்தவர்” – கே.பாலகிருஷ்ணன்

சென்னை: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியும், முற்போக்கு சிந்தனை கொண்டவருமான எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றோம். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில … Read more