சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில்  நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுபமுகூர்த்த தினமான நாளை (நவ.23) பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில், சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் … Read more

மதுரையில் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – பாதியில் நிற்கும் நடவடிக்கை

மதுரை: வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடித்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, அதிகாரிகளை விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வட மற்றும் தென்கரை மக்கள் தடையின்றி இரு நகரப் பகுதிகளுக்கும் வந்து செல்லும் வகையில் வைகை ஆற்றின் இரு கரைகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் … Read more

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 65 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 65 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீஸார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். … Read more

சபாஷ்… சரியான போட்டி… @ புதுக்கோட்டை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி முதல் நாள் நடைபெற்ற நிலையில், அதே இடத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மறுநாள் நடைபெற்றது. விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் … Read more

இல்லாத குப்பையை 'அள்ள' அனுமதி: தன்னார்வலர்களை மடை மாற்றுமா மாநகராட்சி?

சென்னை: ஆசியாவின் 2-வது மிகப்பெரிய கடற்கரையாக மெரினா விளங்குகிறது. சென்னை மாநகருக்கு கல்வி, வேலை, குடும்ப சுப நிகழ்ச்சிகள் நிமித்தமாக சென்னை வருவோர், மெரினா கடற்கரைக்கு வராமல் சொந்த ஊர் திரும்புவதில்லை. அந்த அளவுக்கு உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் மெரினா கடற்கரை வெகுவாக கவர்ந்துள்ளது. இக்கடற்கரைக்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விழாக்காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் குவிகின்றனர். இதற்கு இணையாக வரலாற்று புகழ் பெற்றதாக பெசன்ட்நகர் கடற்கரை விளங்குகிறது. மெரினா … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிச.4 வரை நீதிமன்றக் காவல்: 11-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-வது முறையாகும். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையுடன் … Read more

பெண்ணிடம் மனித உரிமை மீறியதாக புகார்; காவல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி 2019-ல் ஆலங்குளம் போலீஸார் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். நான் அதுபோன்று எந்த செயலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தபோதும் வீட்டில் இருந்த … Read more

'மாட்டிறைச்சி சாப்பிடுவியா' மாணவியை துன்புறுத்திய ஆசிரியை? – கோவையில் அதிர்ச்சி!

Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.