சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை முடிவு

சென்னை: சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் பெண்கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளும் தமிழக சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரின் செயல்களையும் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பை மீறி அவ்வப்போது சிறைக்குள் … Read more

நாங்குநேரியில் மீண்டும் சம்பவம்… நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவன் கைது – முழு விவரம்

Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

“த்ரிஷாவைப் பற்றி நான் தவறாகப் பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது” – மன்சூர் அலி கான்

சென்னை: நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை த்ரிஷா பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் சென்னையில் இன்று (செவ்வாய்) மன்சூர் அலி கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நடிகை த்ரிஷா … Read more

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் அதிமுகவில் இணைப்பு: ஆர்.பி.உதயகுமார் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

மதுரை: உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியால் அதிமுகவில் இணைந்தார். இது அமமுக உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை திமுகவில் சேர்க்கும் நல்ல வாய்ப்பை அக்கட்சி கோட்டை விட்டுள்ளதாக அக்கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். இவர், அமமுக தலைமைக் கழக செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரன் புதிய … Read more

தமிழகத்தில் நவ.24 வரை பரவலாக மழை பெய்யும்: சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் … Read more

தரமான ஓட்டுநர்களை உருவாக்க உதவி ரயில் ஓட்டுநரின் பணிகளை தினமும் கண்காணிக்க உத்தரவு

சென்னை: ரயில் ஓட்டுநர்கள் ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் உதவி ஓட்டுநர்களின் செயல்திறனை மதிப்பிட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் தடம்புரள்வது, சிக்னல் பிரச்னை, ரயில்கள் நேருக்கு நேர் மோதல், தீ விபத்து போன்ற விபத்துகள் தொடர்ந்து நேரிட்டன. குறிப்பாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, … Read more