தமிழக செய்திகள்
2024 தேர்தலுக்கு முன் இன்னும் 6 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: அண்ணாமலை
திண்டுக்கல்: தமிழகத்தில் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக் இருக்கும் வரை வறுமையும் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று (செப்.15) மாலை அண்ணாமலை மேற்கொண்டார். வேடசந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் வழியாக ஆத்துமேடு வரை நடந்து சென்றார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். காரணம், … Read more
"போதிய ஆதரவு கிடைக்கவில்லை" – சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கிய நடிகை விஜயலட்சுமி
சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார். மேலும், “வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்றும் நடிகை விஜயலட்சுமி … Read more
மகளிருக்கு தாயுமானவராகத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம். தாயாகக் கருணையையும் – மனைவியாக உறுதுணையையும் – … Read more
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் முதலில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
அருப்புக்கோட்டை: தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பூர்வீக ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தங்களது பூர்வீக இடத்தையும் விஜயகாந்த் வாழ்ந்த வீட்டையும் நேற்று பார்வையிட்டார். அங்கு உள்ள பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், "கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ரூ.ஆயிரம் வழங்குவது என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. … Read more
“என் மகன் துரை வைகோ பதவிக்காக கட்சியில் இல்லை” – மதுரை மதிமுக மாநாட்டில் வைகோ பேச்சு
மதுரை: “பதவிக்காக என் மகன் துரை வைகோ கட்சியில் இல்லை. இதை நான் வெளிப்படுத்தும் முன்பே மகன் தெரிவித்துவிட்டார்” என மதுரை மதிமுக மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரையில் மதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் மாநாடு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது: “எனது பேச்சாற்றலை பார்த்து காங்கிரஸில் சேர்க்க காமராஜர் தூது அனுப்பினார். அது முடியாத காரியம் என மறுத்துவிட்டேன். மதுரை மக்கள் இன்று … Read more
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மதுரை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும், இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உலக அளவில் தமிழர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்களை மதுரை மாநாட்டில் மதிமுக நிறைவேற்றியது. மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் விபரம்: > பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். > இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் … Read more
கலைஞர் பெண்கள் உரிமைத் தொகைக்கு இனி விண்ணப்பிக்க முடியுமா?
Magalir Urimai Thogai: கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இனி விண்ணப்பிக்க இயலுமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
“புதுச்சேரியில் தகுதியான அனைவருக்கு ரூ.1,000 வழங்கப்படும்” – ஆளுநர் தமிழிசை உறுதி
புதுச்சேரி: “புதுச்சேரியில் ரூ.1000 உதவித் தொகை, எம்எல்ஏக்கள் மூலம் அவரவர் தொகுதியில் உள்ள தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் குறைத் தீர்ப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து குறைகளைக் கேட்டறிந்த ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் மாணிக்கதீபன் உடன் இருந்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அப்போது செய்தியாளர்களிடம் கூறியது … Read more
ஒரே விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 113 பேர்! வசமாக சிக்கியது எப்படி?
ஓமன் நாட்டிலிருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை தங்க கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.