செய்யாறு சிப்காட் விவகாரம்: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு

சென்னை: செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது, இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், … Read more

முதலமைச்சர் தலையீடு… 6 விவசாயிகளின் குண்டாஸ் ரத்து – முழு விவரம்!

Farmers Goondas Removed: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து திருவண்ணாமலையில் 6 விவசாயிகள் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

செய்யாறு விவசாயிகள் மீதான நடவடிக்கையை நியாயப்படுத்துகிறாரா அமைச்சர் எ.வ.வேலு?

திருவண்ணாமலை: “தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக் கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக் கூடாது. பட்டதாரிகள் வேலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்பட்டும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்தப் போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல” என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more

“திமுக அரசுக்கு முருகர் பாடம் புகட்டுவார்” – திருச்செந்தூர் கட்டண உயர்வுக்கு இந்து முன்னணி எச்சரிக்கை

சென்னை: “மக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது தமிழகத்தில் மக்கள் விரோத பாசிச ஆட்சி நடைபெற்று வருவதை தெளிவுபடுத்துகிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை ஆணவத்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட ஆட்சியில் கோயிலை பொருட்காட்சி போல் ஆக்கி எங்கும் எதற்கும் கட்டணம் என பகல் கொள்ளையில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மீதான நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் … Read more

‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தக தடைக்கு எதிரான வழக்கில் மனுதாரர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள ‘ரிட்’ வழக்கு விசாரணைக்கு உகந்ததா என விளக்கமளிக்க, புத்தகத்தின் ஆசிரியர் குழந்தை ராயப்பன் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ‘இந்தப் புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக உள்ளது. பல சமூகத்தினரை விமர்சனம் … Read more

விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுக: அரசுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

சென்னை: “விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அதிமுக போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், … Read more

மயிலாடுதுறை மாவட்ட மழை பாதிப்பு: 39 கால்நடைகள் உயிரிழப்பு, 150 வீடுகள் சேதம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் உயிரிழந்த 39 கால்நடைகள், சேதமடைந்த 150 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மழை பெய்யவில்லை. இந்நிலையில், சீர்காழி வட்டம் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு … Read more

“சிவசங்கர் ஆதரவாளர்களை பாஜக விடப்போவதில்லை” – பெரம்பலூரில் அண்ணாமலை பேச்சு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகரிலிருந்து பேருந்து நிலையம் வரை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: திராவிட மாடல் அரசால் தமிழகம் வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் கூறுவது முற்றிலும் பொய். பெரம்பலூர் மாவட்டம் இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் பொருளாதார மண்டலம் அமைக்க திமுக அரசு 3,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால் இதுவரை அங்கு ஒரு … Read more