விமான நிலையம் தாண்டி வருவாயா? – சென்னை மெட்ரோ ரயிலை கிளாம்பாக்கம் வரை எதிர்நோக்கும் மக்கள்

சென்னை: தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவும், விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தமிழகஅரசிடம் சமர்ப்பித்து 21 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி, விரைவாக செயல்படுத்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆலந்தூர்- கோயம்பேடு இடையே … Read more

’அரைவேக்காட்டு விளக்கம்’ அண்ணாமலைக்கு வகுப்பெடுத்த சசிகாந்த் செந்தில்

உடன்கட்டைக்கும், சதிக்கும் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காட்டு விளக்கத்தை அண்ணாமலை கொடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடுமையாக சாடியுள்ளார்.  

மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

சென்னை: மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகப் பேசி வரும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு … Read more

விஜயலட்சுமி புகார்: கைதுக்கு வாய்ப்பு இருந்ததால் நேரில் ஆஜராகாத சீமான்

திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் காவல்துறை விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2வது முறையாக நேரில் ஆஜராகவில்லை.  

நடிகை விஜயலட்சுமி வழக்கு: சீமான் ஆஜராகாதது ஏன்?- வழக்கறிஞர் விளக்கம்

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் கடந்த 2011-ல் முடித்துவைக்கப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய விசாரணை நடக்கிறதா? என்பது உள்ளிட்ட விவரங்களை காவல்துறை ஆய்வாளரிடம் கேட்டுள்ளதாக சீமான் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், சீமான் தரப்பில், வழக்கறிஞர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகினர். அப்போது சீமான் தரப்பில், இரண்டு கடிதங்கள் காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. … Read more

ஓசூர் பார்வதி நகர், காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைக்குன்று மக்கள்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்குன்றில் உள்ள பார்வதி நகர் மற்றும் காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நகரான ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஓசூரும் ஒன்று. நகராட்சியாக இருந்த ஓசூர் கடந்த 2019-ம் ஆண்டு … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தானா என்பதை அறிந்து அமல்படுத்த வேண்டும்: சரத்குமார்

திருப்பூர்: மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூரில் நூல் விலை நிரந்தரமாக இல்லை என்ற பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி நூல் … Read more

அமைச்சர் சேகர் பாபுவின் உருவ பொம்மையை அடித்து, எரித்த பாஜக!

பெரம்பலூரில் அமைச்சர் சேகர் பாபுவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, எரித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.