“செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றியதே இவங்கதான்” – ஹெச்.ராஜா சொன்ன ரகசியம்!

செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை … Read more

மதுரை | தரமற்றது என்பதால் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி ஆய்வு செய்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்யத் தடை விதித்தார். விவசாயிகளின் விதைத்தேவையை பூர்த்தி செய்யவும், நல்ல தரமான விதைகள் கிடைக்கும் வகையில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி, மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். … Read more

வாடகை கொடுக்கவே காசில்லை… போகிற போக்கில் அண்ணாமலையை சீண்டிய சீமான்

மக்களவைத் தேர்தல் வரவுள்ளதை முன்னிட்டு அதற்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். பிரதமர் போட்டியிடாவிட்டால் நான் தேர்தலில் நிற்க மாட்டேன். சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்று விளக்கினார். 2 கோடி வேலைவாய்ப்புகளை … Read more

மனைவி செய்த கொடூரம்..! படங்களை மிஞ்சும் ட்விஸ்டு..! ஆடிப்போன நாமக்கல் போலீஸ்!

நாமக்கல் அருகே தகாத உறவை கண்டித்ததால், காதலனுடன் இணைத்து கணவனை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.   

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து … Read more

"மத்திய அரசால் பேராபத்து வருகிறது".. கையில் காசு கொடுத்து சீரழிக்கும் திட்டம்.. திருமாவளவன் ஆவேசம்

சென்னை: குலக்கல்வி திட்டத்தை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர மத்திய பாஜக அரசு முயன்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முடி வெட்டுபவரின் மகன் முடிதான் வெட்ட வேண்டும்.. செருப்பு தைப்பவரின் செருப்பு தான் தைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக … Read more

மகளிர் உரிமைத் தொகை: கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல்

மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.  

இன்னும் சில மாதங்களில் 3000 மருத்துவப் பணியாளர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்னும் சில மாதங்களில் 3,000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பணிஆணையினை வழங்குவார் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.30 லட்சம் செலவில் உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா, முழு உடல் பரிசோதனை மையம், ரூ. 10 லட்சம் செலவில் சிறு பிராணிகள் (Lab Animal House) கூடம் … Read more

நீட் தேர்வு.. "இதுதான் உங்க ரகசியமா".. பிரச்சாரத்திலேயே நீ சொல்லிருக்கணும்.. கொதித்து பேசிய இபிஎஸ்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் அண்மையில் கூறிய நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் . “உங்களிடம் நேர்மை இருந்திருந்தால் இந்த ரகசியத்தை பிரச்சாரத்தின் போதே நீங்கள் கூறியிருக்க வேண்டும்” என்றும் அவர் சாடியுள்ளார். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். ஏற்கனவே நீட் தேர்வால் அடிக்கடி தற்கொலை நடந்து வரும் நிலையில், இந்த தற்கொலை சம்பவம் … Read more

என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்

விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.