காவலர் எழுத்து தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் (எஸ்ஐ) மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 (ஆண்கள் – 1,45,804, பெண்கள் – 40,885 மற்றும் திருநங்கைகள் … Read more

ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி அனுப்பிய மெசேஜ்: கெத்து காட்டும் எடப்பாடி – டிசம்பரில் பெரிய மாற்றம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி ஒராண்டுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் திரும்பிய பக்கம் எல்லாம் ஓபிஎஸ் தரப்புக்கு அடிமேல் அடி விழுந்த நிலையில் கடைசியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்தது. ஓபிஎஸ் அணி சட்டப் போராட்டம்!உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில் … Read more

Video: ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் பேசி ஸ்டாலின் வாழ்த்து… 5 மாவட்டங்களுக்கு இன்று லீவ்!

Onam 2023 Wishes: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓணத்திற்கு மலையாளத்திலேயே வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்வு: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2 ஆண்டுகளாக வேகமெடுத்துள்ளது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விலைவாசி, தேசிய அளவைவிட குறைவாக உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழக புள்ளியியல் துறை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மாநிலங்களின் … Read more

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்துக்கு முதல்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த 1968 ஜனவரி மாதம், அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோதுதான் வரலாற்று சிறப்புமிக்க ‘இருமொழிகொள்கை’ தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், … Read more

திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், செப். 1-ம் தேதியும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 30, … Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது? வழக்கறிஞர் டீம் வேகம்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சென்னை புழல் சிறையில் … Read more