காலாண்டு தேர்வு 2023 வினாத்தாள்… வந்தது புது அப்டேட்… அரசு பள்ளிகளில் ட்ரையல் ஏற்பாடு!

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி தேர்வு அட்டவணை தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. காலாண்டு வினாத்தாள் தயாரிப்பு6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து … Read more

அதிமுக நிர்வாகி விந்தியா குறித்து அவதூறு: திமுக நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளரான நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா. அவரைப் பற்றி அவதூறாக பேசி திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் என்பவர் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து குமரன் … Read more

தமிழகத்திற்கு ஹேப்பி நியூஸ் ; காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் ஒருமுறை காவிரி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்த போதிலும் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கு வேண்டிய 39.7 டிஎம்சி நீரை தர மறுத்து முரண்டு பிடித்து வருகிறது கர்நாடகா. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனிடையே தமிழகத்திற்கு கடந்த வாரத்தில் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா. தற்போது கர்நாடகாவில் இருந்து விநாடிக்கு 1900 … Read more

சென்னையில் கந்துவட்டி கொடூரம்: பீர் பாட்டிலால் அடித்து துன்புறுத்திய அரக்க கும்பல்

சென்னையில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் இளைஞரை கந்துவட்டி கும்பல் அழைத்துச் சென்று மது அருந்த வைத்து அடித்து கொடூரமாக துன்புறுத்தியாக வெளியிட்டிருக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.   

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து சம்பவம்: உ.பி சமையலர்கள் உட்பட 5 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமையலர்கள் உட்பட 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்திய மாநிலங்களில் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 60க்கும் மேற்பட்டோர் திட்டமிட்டனர். இதற்காக இக்குழுவினர் இந்திய ரயில்வேயிலுள்ள ஐஆர்சிடிசி மூலம் ரயில் பெட்டி ஒன்றை முன்பதிவு செய்து, கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கினர். மீனாட்சி அம்மன் … Read more

இரண்டு நாள்கள் அடித்து வெளுக்கும் கனமழை: மக்களே உஷார் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் இன்று முதல் ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என ஐந்து மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் … Read more

கோவை மேயர் குடும்பத்தினர் அட்டூழியம்: வீடு மீது சிறுநீர் ஊற்றுவதாக பெண் பரபரப்பு புகார்

வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் தொந்தரவு செய்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட … Read more

"என்ன ஓபி அடிச்சிட்டு இருக்கீங்க".. போய் வேலைய பாருங்க.. அரசு மருத்துவரை விரட்டிய மா. சுப்பிரமணியன்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்கு ஒரு அறையில் அமர்ந்திருந்த மருத்துவரை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நுழைந்தார் மா. சுப்பிரமணியன். அப்போது அமைச்சர் மனோ … Read more

சேலத்தில் பயங்கரம்: பள்ளியில் ஆணியில் தொங்கவிடப்பட்ட மாணவன் – சக மாணவர்கள் அதிர்ச்சி

சேலத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஆறாம் வகுப்பு மாணவனை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆணியில் தூக்கி தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.